More
Categories: Cinema News latest news

மனுஷன் யாருக்குத்தான் என்ன பண்ணல? இளையராஜா செய்த செயலால் கதறி அழுத பாடகர் மனோ!

Singer Mano: அண்ணே அண்ணே, மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகர் மனோ. பூவிழி வாசலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமான மனோவை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியது இளையராஜாதான். சினிமாவில் கிட்டத்தட்ட 30000 ஆயிரத்திற்கு மேலான பாடல்களை பாடியிருக்கும் மனோ 3000 இசைக் கச்சேரிகளை இதுவரை நடத்தியிருக்கிறார்.

நாகூர் பாபு என்ற இயற்பெயரை சினிமாவிற்காக மனோ என்று மாற்றியவர் இளையராஜாதானாம். முறையாக கர்நாட்டிக் இசையை கற்ற மனோ தமிழ் மொழி மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார். பாடுவதையும் தாண்டி டப்பிங்கிலும் கலக்குபவர். ரஜினியின் பெரும்பாலான தெலுங்கு டப்பிங் படங்களுக்கு மனோதான் டப்பிங் பேசுவாராம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: 8 நாள் கால்ஷீட் கொடுத்தேன்… ஆனா 100 நாளை தாண்டி போயிட்டே இருக்கு… வெற்றிமாறனால் புலம்பும் முன்னணி நடிகர்…

அதே போல் கமலின் சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்பந்தம் படத்திற்கும் மனோதான் டப்பிங் பேசினாராம். முறையான இசைக் குடும்பத்தில் இருந்து வந்த மனோ அப்பாவைப் போல இவரும் பாடகராக மாறியிருக்கிறார். குரலை மாற்றி பாடுவதிலும் வல்லவர் மனோ. அப்படி ஒரு சமயம் இந்திரன் சந்திரன் படத்தில் அமைந்த அடிச்சுதுகொட்டம் பாடலுக்காக குரலை மாற்றி கர கரவென குரலில் பாடியதால் அவர் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தாராம் மனோ.

ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்த மனோ பாடகராவதற்கு முன் தெலுங்கு படங்களில்தான் சின்ன சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தாராம். கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு நண்பனாக நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றார். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கு குடை பிடித்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் அதை பண்ணதுக்கு காரணம் இருக்கு!..

விஜய் டிவியில் இப்போது சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மனோவை கவுரப்படுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்களை போட்டியாளர்கள் பாடினார்கள். அப்போது கண்கலங்கி பேசிய மனோ இந்த இசையை பிச்சையாக போட்டது இளையராஜாதான் என இளையராஜாவை நினைத்து கண்கலங்கி பேசினார் மனோ.

Published by
Rohini