ரஜினி படத்துக்கு இசையமைப்பாளரை மாற்றிய தயாரிப்பாளர்… கடுப்பான மனோபாலா என்ன பண்ணார் தெரியுமா?

Rajinikanth
கடந்த 3 ஆம் தேதி நடிகரும் இயக்குனருமான மனோபாலா, கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
மனோபாலா தொடக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து மனோபாலா இயக்கிய முதல் திரைப்படம் “ஆகாய கங்கை”. இத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. எனினும் அதனை தொடர்ந்து மனோபாலா இயக்கிய “பிள்ளை நிலா” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து “சிறைப்பறவை”, “தூரத்து பச்சை” ஆகிய திரைப்படங்களை இயக்கினார் மனோபாலா.

Manobala
அதன் பின் மனோபாலாவிற்கு எம்.ஜி.ஆர் நிறுவனமான சத்யா மூவீஸில் இருந்து அழைப்பு வந்தது. அதே வேளையில் கலைஞரின் பூம்புகார் புரொடக்சன்ஸில் இருந்தும் அழைப்பு வந்தது. சத்யா மூவீஸ் ரஜினிகாந்தை வைத்து புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக மனோபாலாவுக்கு தெரியவர, அவருக்கு எந்த நிறுவனத்தில் படம் இயக்குவது என்பது குறித்த குழப்பம் இருந்தது.
இந்த குழப்பத்தை கலைஞரிடமே மனோபாலா கூறினார். அதற்கு கலைஞர், “உன்னுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். ஆதலால் அந்த ரஜினிபடத்தையே நீ டைரக்ட் பண்ணு” என சொல்லி அவரை அனுப்பினாராம்.

Oorkaavalan
அதன் பின் “ஊர்க்காவலன்” திரைப்படத்தின் பணிகள் தொடங்கியது. சத்யா மூவீஸ் சார்பாக ஆர்.எம்.வீரப்பன் இத்திரைப்படத்தை தயாரித்தார். இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தார்கள்.

Sirpy and Shankar Ganesh
ஆனால் முதலில் இத்திரைப்படத்திற்கு சிற்பிதான் இசையமைப்பதாக இருந்ததாம். ஆனால் ஒரு கட்டத்தில் திடீரென சங்கர்-கணேஷை தேர்வு செய்துவிட்டாராம் ஆர்.எம்.வீரப்பன். இதனால் கடுப்பான மனோபாலா, “பெரிய கம்பெனி என்றால் இப்படித்தான் உடனே ஆட்களை மாற்றிவிடுவீர்களா? தயவு செய்து பூஜை போடும் வரை எனது பெயரை இயக்குனர் என்று போட்டுவிடாதீர்கள். என்னையும் பின்னாளில் மாற்றிவிடுவீர்கள்” என்று அந்த நிறுவனத்தின் மேனேஜரிடம் கோபமாக பேசினாராம்.

RM Veerappan
அதனை தொடர்ந்து மனோபாலா, தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனிடமும் கடுமையாக பேசியுள்ளார். அவர் பேசுவதை மிகப் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பன், அதன் பின், “இத்திரைப்படம் வியாபாரம் ஆகவேண்டும் என்றால் இது போன்ற சில காரியங்களை செய்யத்தான் வேண்டும்” என்று கூறி மனோபாலாவுக்கு புரியவைத்தார். அதன் பிறகுதான் மனோபாலா சாந்தமானாராம்.
இதையும் படிங்க: உயிர் பயத்தை காட்டிட்டாங்க..விஜயகாந்த் படத்தை ரீமேக் செய்த இயக்குனருக்கு நடந்த விபரீதம்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா?.