Connect with us

Cinema History

உயிர் பயத்தை காட்டிட்டாங்க.. விஜயகாந்த் படத்தை ரீமேக் செய்த இயக்குனருக்கு நடந்த விபரீதம்!….

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை அதில் பெரிய மார்க்கெட் கொண்டவை இரண்டு சினிமாக்களே. அதில் ஒன்று தமிழ் சினிமா மற்றொன்று தெலுங்கு சினிமா.. வெகு காலங்களாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரிய மார்க்கெட்டே இல்லை.

அங்கு எடுக்கப்படும் படங்கள் சில கோடிகளுக்கு ஓடுவதே பெரிய விஷயமாக இருந்தது. அதிலும் கன்னட சினிமாவெல்லாம் கே.ஜி.எஃப் என்கிற திரைப்படம் வரும் வரை பலருக்கும் தெரியாமலே இருந்தது. இந்த நிலையில் தமிழ் படத்தை கன்னடத்தில் படமாக எடுக்க போய் அடி வாங்கியுள்ளார் இயக்குனர் ஒருவர்.

2000 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் வானத்தை போல. இந்த திரைப்படம் தமிழில் பிரமாண்டமான ஹிட் கொடுத்தது. எனவே இதை கன்னடத்தில் ரீமேக் செய்யலாம் என திட்டமிட்டார்  தெலுங்கு நடிகர் விஷ்ணுவர்தன்.

இயக்குனருக்கு நடந்த சம்பவம்:

இந்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர் ராதா பாரதி முன் வந்தார். இவர் ஏற்கனவே தமிழில் வைகாசி பொறந்தாச்சி போன்ற படங்களை இயக்கியுள்ளார். எனவே விஷ்ணுவர்தன் கதாநாயகனாக நடித்து இந்த படம் கன்னடத்தில் எஜமன்னா என்கிற பெயரில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்தது.

அப்போது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கு காவிரி பிரச்சனை காரணமாக மோதல் இருந்தது. எனவே தமிழ் படங்களை கர்நாடகாவில் ரீமேக் செய்வதோ ரிலீஸ் செய்வதோ கூடாது என கூறப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் ஒரு கும்பல் இயக்குனர் தங்கியிருந்த ரூமிற்குள் புகுந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளது. பிறகு நடிகர் விஷ்ணுவர்தன்தான் அவரை காப்பாற்றி சென்னையில் சேர்த்துள்ளார்.

அதற்கு பிறகு இயக்குனர் ராதா பாரதி திரும்ப கன்னட சினிமா பக்கமே போகவில்லை.

இதையும் படிங்க: ரத்தம் வரும் வரை நடித்த ஐஸ்வர்யா ராய்.. சைலண்டாக மறைத்த மணிரத்னம்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!.

google news
Continue Reading

More in Cinema History

To Top