ரஜினி பட சூட்டிங்னா இப்படித்தானா? - எனக்கும் ராதிகாவுக்கும் இது செட்டே ஆகாது! ரகசியத்தை பகிர்ந்த மனோபாலா
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக அனைவரையும் கவர்ந்தவர் மனோபாலா. நடிகர் கமலின் உதவி கொண்டு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தவர். அதன் பிறகு பல படங்களை இயக்கி ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக விளங்கினார் மனோபாலா.
கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மனோபாலா ரஜினியை வைத்து ஊர்காவலன் என்ற ஒரே ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் 1987 ஆம் ஆண்டு வெளியாக ரஜினிக்கு ஜோடியாக ராதிகா நடித்தார். சத்யா மூவிஸ் மூலம் தயாரித்த இந்த ஊர்காவலன் படத்தில் சங்கர் கணேஷ் இசை அமைத்தார். சில தினங்களுக்கு முன்புதான் மனோபாலா திரை உலகை விட்டு மறைந்தார் என்றாலும் அவருடைய நினைவலைகள் அவ்வப்போது பல ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஊர்காவலன் படத்தில் தான் பணியாற்றிய அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறிய மனோபாலாவின் அந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ரஜினியுடன் நீங்கள் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது என்று தொகுப்பாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த மனோபாலா முதல் இரண்டு நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டோம் என கூறினார் .ஏனெனில் அந்த முதல் இரண்டு நாட்களில் அனைவரும் உஷ் உஷ் என சத்தம் போடாமல் இருங்கள் என்று எங்களை அமைதி படுத்தினார்கள். இதற்குக் காரணம் ரஜினியின் மீது உள்ள மரியாதை என மனோபாலா கூறினார்.
ஆனால் நானும் ராதிகாவும் அந்த மாதிரி இருந்ததே கிடையாது. நாங்கள் ஒரு பாத்திர கடையில் விடப்பட்ட யானைகள் போல. எங்க வாய் சும்மா கிடக்காது. அதனால் அந்த இரண்டு நாட்கள் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம் என கூறினார். அதன் பிறகு எல்லாம் பழகிவிட படப்பிடிப்பு மிகவும் எளிமையாக போய்விட்டது என்று மனோபாலா கூறினார்.
இதையும் படிங்க : முதலிரவுக்கு முன்னாடியே எல்லாம் பண்ணிடுறாங்க, அதுக்குதான் இந்த புக்கை எழுதினேன்… சர்ச்சையை கிளப்பிய தனுஷ் அப்பா!..