Connect with us

Cinema News

முதலிரவுக்கு முன்னாடியே எல்லாம் பண்ணிடுறாங்க, அதுக்குதான் இந்த புக்கை எழுதினேன்… சர்ச்சையை கிளப்பிய தனுஷ் அப்பா!..

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ், தனுஷை அவரது அண்ணன் செல்வராகவன்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். சினிமாவில் அறிமுகமானபோது அதிக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட தற்சமயம் ஒரு கதாநாயகன் என்கிற அங்கீகாரத்தை பெற்றுள்ளார் தனுஷ்.

தனுஷ் மற்றும் செல்வராகவன் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு காரணமாக இருந்தவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. கஸ்தூரி ராஜாவின் மகன்கள்தான் தனுஷும், செல்வராகவனும்.

கஸ்தூரி ராஜா இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனரானவர். கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார் கஸ்தூரி ராஜா. தற்சமயம் இவர் ஒரு பேட்டியில் பேசும்போது புதிதாக அவர் எழுதிய பாமர இலக்கியம் என்கிற புத்தகத்தை பற்றி பேசியிருந்தார்.

சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி ராஜா:

அதை பற்றி அவர் கூறும்போது, சாலைகளில் போகும்போது நிறைய கலாச்சார சீரழிவுகளை பார்க்க முடிகிறது. எப்போதும் பெண்கள் அதிகமாக கையில் போன் வைத்து கொண்டு யாரிடமாவது பேசி செல்கிறார்கள். அவர்கள் வீட்டில் பேச முடியாத விஷயங்களை சாலைகளில் பேசி செல்கின்றனர்.

அதே போல சிறுவர்கள் எல்லாம் இப்போது மது அருந்துவது போன்ற வீடியோக்களை பார்க்க முடிகிறது. பெண்களுக்கு வெட்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. எத்தனை பேருக்கு முதலிரவு என்பது முதல் இரவாக இருக்கிறது என்பதே இப்போது சந்தேகமாக இருக்கிறது.

அதை பற்றியெல்லாம் பேசும் விதமாகதான் பாமர இலக்கியம் என்னும் நூலை எழுதியுள்ளேன். இது ஏதோ வயதானவர்கள் படிக்கும் புத்தகம் என பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் இது இளைஞர்களுக்கான புத்தகம் என கூறியுள்ளார் கஸ்தூரி ராஜா.

இதையும் படிங்க: புதுப்பேட்டை பார்ட் 2 வருமா? வராதா?… தனுஷின் தந்தை வெளியிட்ட முக்கிய அப்டேட்…

google news
Continue Reading

More in Cinema News

To Top