துக்க வீட்டுல இப்படியா நடப்பாங்க? மனோஜின் கடைசி நேர நெருக்கடி… பிரபலம் சொன்ன புதுத்தகவல்

manoj
Manoj bharathiraja: சமீபத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார். இது தமிழ்த்திரை உலகிற்கே பேரதிர்ச்சியாக இருந்தது. 48 வயசுல மனோஜின் மரணத்துக்குப் பிறகு ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் ரொம்ப அசிங்கம், அருவருப்பானது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
சூர்யா மனோஜின் மனைவியிடம் ஆறுதல் சொல்கிறார். அதை இன்னும் குளோசப்பில் போய் எடுக்கணும்னு நினைத்து மனோஜ் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடிப்பேழையின் மேல் படுத்துக்கிடந்து எடுப்பது போல கேமராவை வைத்து ஒரு தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் படம்பிடிக்கிறார். இது ரொம்பவே அருவருக்கத்தக்க வகையில் இருந்தது.
இதை வச்சிப் பணம் சம்பாதிக்கணுமா என்ற கேள்விதான் எழுகிறது. ரொம்ப வயதானவர் இறந்தால்கூட அந்தத் துக்கம் தாங்க முடியாது. அந்த சூழலில் 48 வயதில் மதியம் வரை பேசிக்கிட்டு இருந்த மனோஜ் இறந்து போனார். அப்படின்னா எவ்வளவு துக்கம் இருக்கும்? அங்கு போய் இப்படியா படம்பிடிப்பார்கள்? அதிலும் பாரதிராஜாவின் கண்களில் இருந்து வரும் கண்ணீரைக்கூட குளோசப்பில் எடுக்கணுமாம். அவர் தேம்பித் தேம்பி அழுவதையும் எடுக்கணும்னு பார்க்குறாங்க.
ஒரு டைரக்டர் வீடியோ பதிவு போட்டுள்ளார். ஆனால் அவர் இறுதி நிகழ்வுக்கே வரல. இந்த மரணத்துக்குக் காரணமே அவர்தான்னு சொல்வேன் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். என்ன நடந்தது என்றும் அந்தனன் இப்படி சொல்கிறார்.
மனோஜை வைத்துப் படம் எடுக்குறாங்க. அது ரிலீஸ் நேரத்துல சிக்கலாகுது. எப்படியாவது பணம் புரட்டிக் கொடுங்கன்னு அந்தப் பிரபலம் மனோஜிடம் கேட்கிறார். அவர் தனது நெருங்கிய உறவுகளிடம் இருந்து 10 லட்சம் புரட்டிக் கொடுக்கிறார். அதுவும் போதாமல் தாயின் நகைகளையும் அடகு வைத்துக் கொடுக்கிறார்.
அப்போது மனோஜிக்குச் சொல்லப்பட்ட உத்தரவாதம் என்னன்னா படம் ரிலீஸ் ஆனதும் நகைகளை மீட்டுத் தருகிறேன் என்றதுதான். ஆனால் ரிலீஸ் ஆனதும் மீட்டுக்கொடுக்கவில்லை. கடைசி வரைக்கும் அந்த நகைக்கு அவர் பொறுப்பேற்கவே இல்லை. நகை என்பது சாதாரண விஷயம் அல்ல. அதோடு பல சம்பவங்கள் தொடர்புடையதாக இருக்கும்.
அந்த சூழலில் மகனின் மனநிலை எப்படி இருக்கும்? தாயின் நகையை மீட்க முடியவில்லையே என்று இருக்கும். அவரோ இருதய ஆபரேஷன் செயயப்பட்டு இருப்பவர். அப்படி எல்லாம் பெரிய நெருக்கடி வந்ததாம். இந்த மன உளைச்சலால்தான் அவர் செய்யக்கூடாத தவறெல்லாம் செய்ததாகத் தெரிகிறது என்கிறார் வலைப்பேச்சாளர் அந்தனன்.