பிளாஷ்பேக்: மனோஜின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தனா பெற்றோர்… தூது சென்றது அவரா?

manoj nandhana
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் காலமானார். இந்த செய்தி திரையுலகையே பேரதிர்ச்சிக்குள் ஆக்கியது. மனோஜைப் பொருத்தவரை அவர் ஒரு ஜாலியாக எளிமையாக அதே நேரம் பெரிய இயக்குனரின் மகன் என்று எந்தப் பந்தாவும் இல்லாமல் பழகக்கூடியவர்.
அதேபோல அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாமல்தான் இருந்தாராம். உதவி இயக்குனராக ஷங்கரிடம் எந்திரன் படத்தில் பணியாற்றியுள்ளார். அதில் சிட்டிரோபாவாக நடித்தது இவர்தானாம்.
மனோஜின் மனைவி நந்தனா ஒரு மலையாளப் பட நடிகை. இவர் சாதுர்யன் என்ற படத்தில் மனோஜ் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். மனோஜ், நந்தனா தம்பதியருக்கு ஆர்த்திகா, மதிவதனி என இரு மகள்கள் உள்ளனர். அது சரி. மனோஜ், நந்தனா இடையே காதல் மலர்ந்து அது சக்சஸ் ஆனது எப்படின்னு தெரியுமா?
சாதுர்யன் படத்தில் நடிக்கும்போது இவர் நடிகை நந்தனாவைக் காதலித்துக் கொண்டு இருந்தார். முதலில் தன் காதலைச் சொன்னது மனோஜ்தானாம். 2வருடங்களாகக் காதல் வளர்ந்துள்ளது. அதே நேரம் நந்தனாவின் வீட்டில் அவர்களது காதலை ஏற்கவில்லையாம். அப்போது அப்பாவிடம் தன் காதலைப் பற்றிச் சொல்ல பயந்து நேராக இளையராஜாவிடம் போய்ச் சொல்லி இருக்கிறார்.
அதன்பிறகு இளையராஜா தான் நந்தனா வீட்டாரிடம் பேசி இவர்களது காதலைச் சேர்த்து வைத்தாராம். மனோஜ், நந்தனாவின் திருமணம் 19.11.2006ல் நடந்தது. மனோஜைப் பொருத்தவரை குடும்பத்தின் நினைவாகவே இருப்பாராம். குழந்தைகள் மேல் அவ்ளோ பாசமாம். படப்பிடிப்பு இடைவேளையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் வீட்டிற்கு வந்து மனைவி, மகள்களுடன் நேரத்தை செலவிடுவாராம்.
2005ல் மனோஜ், நந்தனா இருவரும் இணைந்து நடித்த படம் சாதுர்யன். டி.ஜே.குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.