அப்பாவால் மனோஜ் சந்தித்த அவமானங்கள்… பிரபலம் பகீர் தகவல்!

bharathiraja manoj
Manoj bharathiraja: மனோஜ் இறப்பு மற்றும் பாரதிராஜாவுக்கும், அவருக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி என்ன சொல்கிறார்னு பாருங்க.
மனோஜைப் பொருத்தவரை அவர் 'பார்ன் வித் சில்வர் ஸ்பூனா'கவே இருந்தாலும் எல்லாருடனும் எளிமையாக அன்பாகப் பழகுவார். அவரது இறப்பு என்னால் நம்பவே முடியல. சினிமாவைப் பொருத்தவரை ஒருவர் வெற்றி பெற்றதற்கான காரணத்தையும், தோல்வி அடைந்ததற்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாது. மனோஜ் தாஜ்மகால் படத்தில் அறிமுகமானார். அவரை பாரதிராஜா ஒரு நல்ல கதைகளம் கொண்ட படத்தின் மூலமாக அறிமுகமாக்கவில்லைன்னுதான் சொல்லணும்.
தாஜ்மகால் படத்தைப் பார்த்தா அது ஒரு கிராமிய படமும் இல்லை. ஃபேன்டஸியும் இல்லை. ஒரு மாதிரியான கலவை. அது மக்களை ஈர்க்கவில்லை. ஏ.ஆர்.ரகுமான் பாடல் எல்லாம் சூப்பராக இருந்தது. பயங்கரமான கூட்டணி இருந்தும் படம் வெற்றிபெறவில்லை. சினிமாவைப் பொருத்தவரை முதல் வெற்றி மிக மிக முக்கியம். அது மனோஜிக்கு அமையல. வருஷமெல்லாம் வசந்தம் படத்துல எங்கே அந்த வெண்ணிலா பாடல் எல்லாம் சூப்பர்ஹிட். எந்திரன் படத்துல உதவி இயக்குனராக இருந்தார். என்னைப் பொருத்தவரை அவர் அப்பாவை மாதிரி இயக்குனர் மாதிரி ஆகி இருந்தால் நல்ல கிளிக் ஆகி இருப்பார்.
ஆனால் சினிமாவைப் பொருத்தவரைக்கும் இயக்குனரை விட திரையில் வரும் ஹீரோவைத் தான் பெரிசாப் பார்ப்பாங்க. அதனால பாரதிராஜாவும் தன் மகனை நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் அது எடுபடவில்லை. அந்த வகையில் சினிமாவில் மனோஜிக்கு நடிகராகவும் சரி. இயக்குனராகவும் சரி. எதுவுமே கைகொடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவை நடிக்க வைத்து மனோஜ் இயக்கிய படம் மார்கழித்திங்கள். அதுவும் பெரிய அளவில் எடுபடவில்லை.
எது எப்படியோ முதல் படத்திலேயே பாரதிராஜா மனோஜிக்குத் தோல்வியைக் கொடுத்து விட்டார். மற்ற நடிகர்களுக்கு எல்லாம் சூப்பர் கதைகளாக வைத்து அறிமுகம் செய்கிறார். அவர்களும் பெரிய நட்சத்திரமாகி விடுகின்றனர். ஆனால் தன் பிள்ளைக்கு அவர் பார்த்துப் பார்த்து பெரிய ஜாம்பவான்களைப் படத்தில் வைத்ததைப் போல கதைகளத்திலும் கவனம் செலுத்தி இருக்கலாமே என்றே தெரிகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். இப்போது அதுதானே மனோஜ் விஷயத்திலும் நடந்திருக்கிறது.