Connect with us

Cinema History

ஒரே நாள்… ரயில் பயணத்திலேயே மனோரமா செய்த ஆச்சரியப்படும் சம்பவம்… அசத்திட்டீங்களே ஆச்சி..!

Manorama: தமிழ் சினிமாவின் ஆச்சி என ஆசையாய் அழைக்கப்படும் மனோரமா நடிப்பில் செம கெட்டியாக இருந்தவர். அவர் சினிமாவை விட நாடகத்தில் செய்ததை எல்லாம் எந்த நடிகைகளும் செய்திருக்க மாட்டார்கள் என்பதையே பலர் ஆச்சரியமாக பார்க்கின்றனராம்.

வைரம் நாடக சபா நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து தன் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் மனோரமா. ஒருமுறை புதுக்கோட்டையில் வசிக்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். பி.ஏ. குமார் அவரை ராஜேந்திரனிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். டயலாக் டெலிவரியில் தன் திறமையை வெளிப்படுத்திய அவருக்கு எஸ்.எஸ்.ஆரில் வேலை கிடைத்தது. 

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..

நாடக மன்றம் கம்பெனியில் மாவட்டம் முழுவதும் சென்று நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்தார். அதில் மணிமகுடம், தென்பாண்டிவீரன் மற்றும் புதுவெல்லம் உள்ளிட்ட நாடகங்கள் சிறப்பு வாய்ந்தது. இதை தொடர்ந்து கண்ணதாசன் படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

அப்போது தான் முத்துராமன் கலைமணி என்ற நாடக சபாவை தொடங்கினார். புயலுக்கு பின் என்ற நாடகத்தில் தான் இரண்டாவது நாயகியை தேடி வந்தனர். அந்த சமயம் மனோரமாவிடம் கேட்டு இருக்கிறார்கள். அவர் யோசிக்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க: மகன் பிறந்தும் பார்க்க போகாத நாகேஷ்!.. காமெடி நடிகருக்குள் இவ்வளவு சோகமா?!…

என்னைக்கு நாடகம் எனக் கேட்க நாளைக்கு தான் என்றாராம் முத்துராமன். உடனே அன்று நைட்டே கிளம்பி விட்டார். ரயிலில் ஏறி உட்கார்ந்த போது தான் அடுத்த நாள் மனோரமா பேச வேண்டிய 100 பக்க வசனங்களும் கொடுக்கப்பட்டதாம். டயலாக் முதல் பாடல் வரை எல்லாத்தையுமே அவரே மனப்பாடம் செய்தாராம்.

இன்றைய சினிமா உலகில் 25 படங்களை தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் 1500 படங்களை நடித்த ஒரே நடிகை என்ற அந்தஸ்த்தினை பெற்றவர் மனோரமா ஆச்சி. அதனால் தான் அவர் இறப்புக்கு தமிழ் சினிமாவில் இருந்து எல்லா முன்னணி நடிகர்கள் வந்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top