More
Categories: Cinema News latest news

ஹீரோயினோட சேலையை உருவி!.. அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன்!.. அந்த சீன் பற்றி பேசிய மன்சூர் அலி கான்!..

லியோ படத்தில் நடித்துள்ள நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலில் நடந்த ஃபேன் மீட்டில் கலந்து கொண்டு மனம் திறந்து பல விஷயங்களை பேசினார்.

கேப்டன் பிரபாகரன், தாயகம் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்த மன்சூர் அலி கான் தனது நண்பரின் தற்போதைய நிலைக்கு காரணமே அவர் அரசியலுக்கு வந்தது தான் என உணர்ச்சிப் பொங்க பேசி கேப்டன் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டார்.

Advertising
Advertising

லியோ படத்தில் எனக்கு ஃபைட் இருக்கு:

ஸ்டேஜிலேயே க்ளிசெரின் போடாமல் அழுவீங்களான்னு ஒரு ரசிகர் கேட்க, நானெல்லாம் சினிமாவில் டிப்ளோமா வாங்கிட்டு நடிக்க வந்தவன், அழுகை சீன் என்று சொன்னால், க்ளிசரின் எல்லாம் போட்டுக் கொண்டு கண்ணை வீணாக்க மாட்டேன் என சொல்லிட்டு அந்த மேடையிலேயே கண்கலங்கி அழுது காட்டி ரசிகர்களை புல்லரிக்கச் செய்து விட்டார்.

லோகேஷ் கனகராஜ் உங்களுடைய தீவிர ரசிகர் என்றும் கைதி படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க உங்களை தான் முதலில் தேர்வு செய்தார் என்றும் சொன்னாரே அதை எப்படி பார்க்குறீங்க என ஒரு ரசிகர் கேட்ட போது, என் பெயரை எல்லாம் அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை.

ஆனால், வெளிப்படையாக அவர் பேசியதற்கு ரொம்ப நன்றி. என் நேரம் அந்த படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்ற மன்சூர் அலி கான் லியோ படத்தில் பல பேரை தூக்கிப் போட்டு பந்தாடியிருக்கேன் என ஃபைட் சீனில் நடித்ததையும் உளறிவிட்டு, அச்சச்சோ சொல்லிட்டேனே என பதறியே விட்டார்.

இதையும் படிங்க: கடலிலேயே 7 போட்டு கலக்கிய கமல்!.. எத்தனை படம் இருந்தாலும்!.. பிக் பாஸ் சீசன் 7 தான் முக்கியமாம்!..

ஹீரோயின் சேலையை உருவி:

அப்போதெல்லாம் சினிமாவில் வில்லன்கள் நடிகைகளின் ஆடைகளை உருவி கிளைமேக்ஸ் காட்சிகளில் அத்துமீறி நடிக்கும் காட்சிகளை எப்படி படமாக்குவாங்கன்னு ஆர்வத்துடன் கேட்ட ஒரு ரசிகருக்கு ரம்யா கிருஷ்ணன், வினிதா என பல ஹீரோயின்களுடன் அதுபோன்ற சீன்களில் நடிச்சிருக்கேன்.

சேலையை உருவி, அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன். அப்போதெல்லாம் ரீல் தானே, ஒரு டேக்கில் ஓகே ஆகாது. ஒரு டேக்கில் ஓகே ஆகவில்லை என்றால் உங்களுக்கு ஹேப்பி, டைரக்டர் வந்து சீனை ஒழுங்கா நடிம்மான்னு திட்டுவார். அந்த சீன் முடிந்தவுடன், மன்னிச்சிடு தங்கச்சின்னு சொல்லிட்டு போயிடுவேன் என படு கேஷுவலாக அளித்த பதில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: லோகேஷ் கையிலெடுக்கும் ரோலக்ஸ்!.. வெறித்தனமா களமிறங்கும் சூர்யா!.. பரபர அப்டேட்!…

 

Published by
Saranya M

Recent Posts