டம்மி துப்பாக்கி.. அட்டக்கத்தி.. வெறும் பில்டப்பு!.. லோகேஷை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்…

Published on: October 25, 2023
mansoor
---Advertisement---

Mansoor Alikahn : கேப்டன் பிரபாகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். அதன்பின் பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். சில படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். இப்போது கூட சரக்கு என்கிற படத்தை தயாரித்து, இயக்கி நடித்துள்ளார்.

இந்த படம் சென்சாரில் சிக்கி விழி பிதுங்கி கொண்டிருக்கிறது. எனவே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி தனது பக்க நியாயத்தை மன்சூர் அலிகான் பேசிவருகிறார். மன்சூர் அலிகான் எப்போதும் யாருக்காகவும் பயப்படாதவர். அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார்.

இதையும் படிங்க: லியோ படத்தில் நீ இருப்பியாமா… அனுராதா மகன் ஆசையாக கேட்ட விஷயம்.. ஆனா கடைசியில் செம ட்விஸ்ட்டே..!

இதற்காக பல முறை சிறையும் சென்றிருக்கிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீனத்திற்கு அழைத்துள்ளார். ரூ.500 கோடி செலவு செய்து லட்சம் பேருக்கு வேலை கொடுத்து ஒன்றரை வருஷம் படாதபாடு பட்டு ரூ.1000 கோடி வசூலுக்கு உழைக்கிறோம்.

ஆனால், ஒரே ஒரு கையெழுத்த போட்டுட்டு அரசியல்வாதி பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி ஆட்டைய போடுறான். அவங்களுக்கு திட்றமாதிரி ஒரு கதைல நடிக்க நான் ரெடி. லோகேஷ் என்னை வச்சி அப்படி ஒரு படம் எடுக்கலாம். அதை விட்டுட்டு தம்மாத்துண்டு ரோலுக்கு அவ்வளோ பெரிய பில்டப்பு..

இதையும் படிங்க: போதும்டா சாமி! இனிமே இப்படி நடிக்கவே மாட்டேன் – ஹீரோயின்களை பார்த்து தலை தெறிக்க ஓடிய விஷால்

என் கூட வாங்க. பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம். வாங்க போய் எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சிட்டு வரலாம். அப்பாவி மக்கள் இறந்துபோறாங்க. அதைவிட்டுட்டு சும்மா டம்மி துப்பாக்கி, அட்டக்கத்திய கையில கொடுத்துக்கிட்டு என்ன ஆவப்போகுது. வாங்க லோகேஷ்.. போருக்கு போவோம்’ என அழைப்பு விடுத்துள்ளார்.

மன்சூர் அலிகான் இந்த அழைப்புக்கு லோகேஷ் கனகராஜ் ரியாக்‌ஷன் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.