Categories: Cinema News latest news

மன்சூர் அலிகானின் மன்னிப்புக்கு திரிஷா ரியாக்‌ஷன் இதுதான்!.. அட இது கமல் டயலாக் ஆச்சே!..

Mansoor Alikhan: நடிகை த்ரிஷாவை மோசமாக விமர்சித்த மன்சூர் அலிகானுக்கு எதிராக எக்கசக்கமாக கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து அவரை பலரும் மன்னிப்பு கேட்க சொல்லி வற்புறுத்தியதை அடுத்து அவர் சமீபத்தில் மன்னிப்பு கேட்டு இருந்தார். இதற்கு தற்போது த்ரிஷாவின் ரியாக்‌ஷன் பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

தேவையே இல்லாமல் வாய் கொழுப்பாக ஒரு வீடியோவில் மன்சூர் அலிகான் பேசிய பேச்சு வைரலானது. மோசமான கருத்துக்களை கொண்ட அந்த வீடியோ த்ரிஷா பார்வைக்கே போக அம்மணி மொத்த கோபத்தினையும் எக்ஸ் தளம் மூலம் இறக்கி வைத்தார்.

இதையும் படிங்க: இந்த வாரம் செம வேட்டை தான் போல… அண்ணன் வரார் வழி விடு.. இந்த வார ஓடிடி அப்டேட்..!

அதை பார்த்த பிரபலங்களும் மன்சூர் அலிகான் மீது கண்டனத்தினை சொல்ல மன்னிப்பு கேட்டு விட வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில் இதெல்லாம் யாரோ செய்ற சதி என்ற ரீதியில் பேசியவர் மன்னிப்பு மட்டும் கேட்கும் நிலைக்கு வரவில்லை. இதை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் ஆஜரான சம்மன் அனுப்பிப்பட்டதாம்.

அதை தொடர்ந்தே அது இது என எல்லா கதையையும் பேசி கடைசியாக த்ரிஷாவிடம் மன்னிப்பும் கேட்டு விட்டார். எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும் போது ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: அந்த படம் ஓடாததற்கு காரணமே ஜோதிகாதான்!.. பல வருடங்கள் கழித்து பொங்கும் இயக்குனர்..

மன்சூர் பிரச்னையை தொடர்ந்து பிக்பாஸில் விசித்ரா பேசியது என இந்த வாரம் மீ டு பிரச்னை அதிகமாக உருவாகி இருக்கிறது. அதிலும் மனிஷா யாதவ் மற்றும் சீனுராமசாமி பிரச்னை உச்ச நிலையை எட்டி இருக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Published by
Akhilan