படப்பிடிப்பில் ஒரே அதகளம்!.. கேப்டனிடமிருந்து வந்த ஒரே போன்.. பொட்டிப்பாம்பாக அடங்கிய மன்சூர் அலிகான்..
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு மிகவும் பேர் போனவர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன்nபடத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே ஆக்ரோஷமான தோற்றத்தோடு மக்களை பீதியடைய செய்தார். அந்தப் படத்தில் அவரின் நடிப்பை பார்த்து பல படங்களில் வாய்ப்புகள் வந்தன.
தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவே தோன்றி மக்களை மிரட்டினார் மன்சுர் அலிகான். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களிலும் சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். அந்த கதாபாத்திரங்களையும் மக்கள் ரசிக்க தொடங்கினர்.
மன்சூர் அலிகானுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அரசியலிலும் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.அரசியல் பற்றிய இவரது பார்வை மிகவும் வித்தியாசமானது. பல பேட்டிகளில் இவரின் சுபாவம் ரசிக்கும் படியாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோக்கள் எல்லாம் வைரல் ஆனது.
அப்படி பட்ட ஒரு வீடியோவால் தான் லோகேஷும் மன்சூருக்கு ரசிகராக மாறினார். அதனால் தான் கைதி படம் கூட கார்த்திக்கு பதிலாக மன்சூர் தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அது முடியாமல் போனது. அதனால் தான் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார்.
எதையும் துணிச்சலாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். யாருக்கும் அடங்காதவர். ஆனால் கேப்டன் என்ற பெயரை கேட்டால் மட்டும் அப்படியே அடங்கிருவாராம் மன்சூர். மன்சூர் அலிகான் பார்த்து பயப்படுகிற ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டும் தானாம். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
மறுமலர்ச்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மன்சூரை ஷார்ட் ரெடியானதும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் லாட்ஜில் தங்கிக் கொண்டு வரமாட்டேன் , போயா அதெல்லாம் வரமுடியாது என அவருக்கே உரிய பாணியில் கூறியிருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லையாம்.
உடனே அங்கு இருந்து விஜயகாந்திற்கு தகவல் போயிருக்கிறது. உடனே விஜயகாந்த் போனே மன்சூரிடம் கொடுக்க சொல்லி பேசினாராம். ‘ஒழுங்கா சூட்டிங் போக மாட்டீயா? போகலைனா என்ன ஆவேனு தெரியும்ல, நடிக்க முடியாது பார்த்துக்கோ’ என்று சொல்லி மிரட்டியிருக்கிறாராம். அதன் பிறகே மன்சூர் ஷார்ட்டுக்கு போனாராம்.
இதையும் படிங்க :அஜித்தோட அந்த படம் நடிச்சப்ப நான் 9ஆவது படிச்சிட்டு இருந்தேன்! – நடிகை சொன்ன ஷாக் தகவல்!..