த்ரிஷாவை வரவச்சு இத செய்வேன்! லோகேஷும் விஜயும் கோபிச்சுக்கிட்டாலும் பரவாயில்ல – மன்சூர் அலிகான் பகீர் பேட்டி

Published on: November 20, 2023
tri
---Advertisement---

Trisha vs Mansoor Alikhan: கடந்த சில தினங்களாக மன்சூர் அலிகான் த்ரிஷாவை குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த பிரச்சினை தேசிய மகளிர் ஆணையம் வரை சென்று மிகவும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தீடீரென ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் வைரமுத்துவை பற்றி கேள்விக்குத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன் என்றும் த்ரிஷாவுடன் நடித்த அனுபவம் பற்றி கேள்விக் கேட்கையில் அதை அப்படியே நிறுத்தி விட்டு இதை பேச ஆரம்பித்தேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: மூச்சுவிடுவதில் சிரமம்.. மருத்துவமனையில் அட்மிட்டான விஜயகாந்த்… என்ன நடந்தது?

அதுமட்டுமில்லாமல் நான் த்ரிஷாவுடன் நடிக்கவே இல்லையே. நான் பேசியதை அப்படியே திருத்தி போட்டு எனக்கெதிராக சதி தீட்டுகின்றனர் என்றும் என் படம் இன்னும் 10 நாள்களில் ரிலீஸ் ஆக இருப்பதால் அதை தடுக்கவே இந்த சதி என்றும் மன்சூர் அலிகான் கூறினார்.

மேலும் அந்த முழு வீடியோவை பார்த்தால் புரியும் என்றும் ஒரு தனிமனிதனா இருந்து இப்படியெல்லாம் த்ரிஷாவை பேச முடியுமா என்றும் மன்சூர் கூறினார். அதோடு குஷ்பு, ரோஜா, வானதி ஸ்ரீனிவாசன் போன்றோர்களும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தாலும் நான் என்ன கூற வந்தேன் என்பதை தீர ஆராய்ந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள் என்றும் மன்சூர் கூறினார்.

இதையும் படிங்க: திருமணமானவர்னு தெரிஞ்சும் அவர் கூட போனதுதான் நான் செஞ்ச தப்பு! நடிகையின் வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா?

அதுமட்டுமில்லாமல் இதை சொல்வதனால் விஜயும் லோகேஷும் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. லியோ படத்தில் நடித்திருக்கவே கூடாது. அதனால்தான் இவ்வளவு பிரச்சினையும் என்று கூறிய மன்சூர் நடிகர் சங்கம் த்ரிஷாவை வரவழைக்க வேண்டும். அவரிடம் நான் முழு வீடியோவையும் போட்டு காட்ட ரெடி. அப்போதுதான் த்ரிஷாவுக்கு புரியும் என்றும் மன்சூர் கூறினார்.

ஆனால் எதற்காகவும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். தவறு செய்திருந்தால்தானே மன்னிப்பு கேட்க முடியும்? நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக மன்சூர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஷூட்டிங் லேட்டா போறதுக்கு கார்த்திக் சொன்ன காரணம் இதுதான்!.. அட இது புதுசா இருக்கே!..

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.