Indian 2: இத்தனை பேர் இறந்துட்டாங்களா?... இந்தியன் 2 வின் மோசமான சாதனை!

indian2
Indian 2 : நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மோசமான வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்ததாக இந்தியன் 3 படத்தினை திரையரங்கில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
கமல்ஹாசன் பிக்பாஸ் முதல் சீசனை தொகுத்து வழங்கியபோது இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அவர் 7 ஆண்டுகள் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர்தான் இந்தியன் 2 திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் படப்பிடிப்பில் இப்படம் இருந்தது.
இதையும் படிங்க: Kanguva: தொடங்கியது கங்குவா ப்ரீ புக்கிங்!… இனி வசூல் வேட்டைதான்… இதுவரை எவ்வளவு தெரியுமா?…
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்படத்துக்கு சுத்தமாக இல்லை. அதோடு படப்பிடிப்பு தளத்திலும் 3 பேர் இறந்தது என ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தது. 28 ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் என்ற எதிர்பார்ப்பினையும் மோசமான திரைக்கதையால் ஷங்கர் கெடுத்து விட்டார்.

Vivek
சமீபத்திய படங்களில் கமலுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்த படம் என இதை கூறலாம். இதனால் அடுத்ததாக இந்தியன் 3 படத்திற்கும் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஓடிடி தளத்திலாவது அப்படம் வெளிவருமா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்தநிலையில் இப்படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இறந்து போனது அதிர்ச்சியை அளித்துள்ளது.
நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, மாரிமுத்து ஆகியோர் வரிசையில் டெல்லி கணேஷும் இணைந்துள்ளார். மேற்கண்ட நடிகர்கள் அனைவருக்குமே இந்தியன் 2 படம் தான் கடைசி படமாக அமைந்துள்ளது.