தீபாவளி முடிந்தும் கெத்து காட்டும் விஜய்... லியோவுக்கு அடிச்ச லக்!.. திடீரென நடந்த டிவிஸ்ட்!..

Leo movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன் என பலரும் நடித்து கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் இந்த படத்திற்கு உருவானது போல எந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு உருவானதில்லை.

விக்ரம் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி ஸ்டார் அந்தஸ்த்தை பெற்ற லோகேஷ் கனகராஜை மாஸ்டருக்கு பின் விஜயை வைத்து மீண்டும் இயக்கியதால் விஜயின் ரசிகர்களும் இப்படத்தை பெரிய ரேஞ்சுக்கு எதிர்பார்த்தனர். ஆனால், இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனாலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது.

இதையும் படிங்க: அண்ணனுக்காக உயிரயே கொடுக்கும் தம்பி! விஜய் – அட்லீ பின்னி பிணைய இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை தயாரிப்பாளருக்கு லாபமாக கொடுத்தது இல்லை. ஆனால், லியோ படம் மட்டுமே அதை செய்தது. அதேநேரம் இந்த படத்தின் வசூல் தொகை என்ன என்பதை தயாரிப்பு நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

ஆனாலும், விஜய்க்கு இது ஒரு வெற்றிபடமாகவே அமைந்துள்ளது. அதேநேரம், லோகேஷ் கனகராஜ் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை. படத்தின் இரண்டாம் பாதி நன்றாக இல்லை என்றும் பலரும் தெரிவித்தனர். இதை லோகேஷும் ஒத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: அடுத்து பண்ண போறத பாருங்கடா!.. விஜய் இல்லனா வேற நடிகர்!.. கொக்கரிக்கும் அட்லீ!..

லியோ படம் வெளியாகி 22வது நாளில் தீபாவளி ரிலீஸாக ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. இதில், ஜிகரதண்டா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் லியோ படத்திற்கு இன்னும் கூட்டம் இருக்கிறது.

படம் வெளியாகி 28 நாட்கள் ஆனபின்னரும் தீபாவளி ரிலீஸாக படங்கள் வெளியான பின்னரும் லியோ படத்திற்கு மல்ட்டி பிளக்ஸ் தியேட்டரில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரு பக்கா மாஸ் கதை!.. அந்த படத்தை தாண்டணும்!.. அட்லீ சொல்றத கேளுங்க!..

 

Related Articles

Next Story