விரைவில் வாழை 2!.. அது சிவனணைந்தனின் கதை!.. புது அப்டேட் கொடுத்த மாரி செல்வாராஜ்!...
Mari selvaraj: தமிழ் சினிமாவில் பேசும் இயக்குனராக மாறியிருப்பவர் மாரி செல்வராஜ். இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்தவர். தன்னுடையை சமூகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்த பிரச்சனைகள் பற்றி தன்னுடைய படங்களில் பேசி வருகிறார். ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பிரச்சனை பற்றி பேசுகிறார்.
கர்ணன் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு பேருந்து நிற்காமல் செல்வது பற்றி பேசியிருந்தார். மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அரசியலில் எப்படி நடத்துகிறார்கள் என்பதை காட்டியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து லைக் போடும் தனுஷ்!.. இருவரும் மீண்டும் இணைவார்களா?!…
அதன்பின் மாரி செல்வராஜ் இயக்கிய படம்தான் வாழை. 30 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த பிர்ச்சனையை இப்படம் பேசியது. வாழை தோப்பில் வேலை செய்யும் மக்களின் காதல், வாழ்க்கை, பள்ளி அனுபவங்கள் பற்றி இபப்டம் பேசியது. இப்படத்தின் இறுதிக்காட்சி பலரையும் அழவைத்தது.
இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் வந்த பூங்கொடி டீச்சர் கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. அந்த கதாபாத்திரம் பலருக்கும் தங்களின் பள்ளி அனுபவங்களை நினைவுப்படுத்தியது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றிவிழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் அப்படத்தில் நடித்த பலரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ் ‘இந்த படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் நான் திரையுலகத்தினருக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் அழைத்த எல்லோரும் வந்து படம் பார்த்தார்கள்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஏன் பூங்கொடி டீச்சர் வரவில்லை என கேட்கிறாரக்ள். உண்மையில் அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. படத்தின் இறுதியில் சிவனணைந்தன் டீச்சரின் மடியில் படுத்திருப்பது போல காட்சியை எடுக்க நினைத்திருந்தேன். அப்படி செய்திருந்தால் இப்போது பலருக்கும் வைக்கும் மோசமான குற்றச்சாட்டுக்கு அது பதிலா இருந்திருக்கும்.
வாழை 2 கண்டிப்பாக வரும். இதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. அது சிவனணைந்தனை வைத்து எடுப்பேன். என்னை பற்றி பலரும் புரிந்துகொள்வதற்கு அது உதவியா இருக்கும்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: கமல் கைவிட்ட படத்தில் சிம்புவா? என்னடா இங்க நடக்குது?!