ரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் மாரி செல்வராஜ். அதன்பின் கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார். தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த பிரச்சனைகளை தொடர்ந்து தனது திரைப்படங்களில் பேசி வருகிறார் மாரி செல்வராஜ். ஒருபக்கம் மாமன்னன் படம் எடுத்தபோது உதயநிதிக்கும் அவர் நெருக்கமானவராக மாறினார். அப்படியே தற்போது அவர் திமுகவுக்கும் நெருக்கமானவராகவும் மாறி இருக்கிறார்.. உதயநிதியிம் மகன் இன்பநிதி சினிமாவில் அறிமுகமாகும் படத்தையும் மாரி செல்வராஜ்தான் இயக்கவுள்ளார்.
ஒருபக்கம், தமிழக அரசியலைப் பொறுத்தவரை தேர்தல் வந்துவிட்டாலே ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சியின் கொள்கையை பாடுவது போலவும். அந்த கட்சி தலைவரின் புகழ் பாடுவது போலவும் ஒரு பாட்டை உருவாக்குவது என்பது சமீப காலமாகவே டிரெண்ட்டாகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கூட திமுக சார்பில் ‘ஸ்டாலின்தான் வராரு.. விடிவில் தரப் போறாரு’ என்கிற பாடலை உருவாக்கினார்கள். அந்த பாடல் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
ஒருபக்கம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை துவங்கியபோது ‘உங்கள் விஜய்.. உங்கள் விஜய்’ என்று ஒரு பாடலை உருவாக்கினார்கள். அந்த பாடலை விஜயே பாடியிருந்தார். தவெக தொடர்பான பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மாநாடு என எல்லா இடத்திலும் இந்த பாடல்தான் ஒலிக்கிறது.. இந்த பாட்டுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருக்கிறது..
இந்நிலையில், 2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தவெக பாடலை விட ஒரு சிறப்பான பாடலை உருவாக்க வேண்டும் என நினைத்த திமுக இயக்குனர் மாரி செல்வராஜிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறதாம். எனவே விரைவில் ஒரு இசையமைப்பாளரை பிடித்து பாடலை உருவாக்கி திமுக தலைவர் ஸ்டாலினை வைத்து அந்த வீடியோவை மாரி செல்வராஜ் இயக்கப் போகிறாராம். திமுக தேர்தல் பிரச்சார பாடலாக இந்த பாடல் எல்லா இடங்களிலும் ஒலிக்கும் எனத்தெரிகிறது.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…