விஜய் படத்தை பார்க்க டெலிபோன் குழிக்குள் குதித்த இயக்குனர்.. செம சம்பவமா இருக்கும் போல!..
தமிழ் சினிமாவில் அதிக ரசிக வட்டாரத்தைக் கொண்ட செல்வாக்கான நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நடிகர் விஜய்யின் சம்பளம் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது என்று ஒரு பேச்சு உண்டு.
தற்சமயம் நடிகர் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் தான் இருக்கிறார் என்றும் அவரது சம்பளம் 100 கோடியை தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக அடுத்து வெங்கட் பிரபுவோடு விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு அவர் 200 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் வலம் வருகின்றன.
விஜயின் சம்பளம் இவ்வளவு அதிகரிப்பதற்கு அவருடைய ரசிக வட்டாரங்களே முக்கிய காரணமாக உள்ளன. கேரளா தமிழ்நாடு என இரண்டு மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு அதிகமான ரசிக வட்டாரங்கள் உண்டு. சினி துறையிலும் கூட அதிகமான நபர்கள் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
இயக்குனர் செய்த சம்பவம்:
மாமன்னன், கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜும்கூட விஜய்யின் மிகப்பெரும் ரசிகர் ஆவார். ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது ”விஜய்யின் படங்களை கல்லூரி நாட்களில் நான் முதல் நாள் முதல் ஷோவில் சென்று பார்த்து விடுவேன். மதுர திரைப்படத்தை பார்ப்பதற்காக இப்படி செல்லும் பொழுது திரையரங்கு இருக்கும் பகுதியில் பேருந்தை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது டெலிபோன் வயர் போடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டிருந்தன நான் மதுர திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக ஓடும் பேருந்தில் இருந்து குதித்து விட்டேன். குதித்தவுடன் நேராக சென்று அந்த டெலிபோன் குழிக்குள் விழுந்துவிட்டேன். பிறகு அதிலிருந்து எழுந்து மதுர திரைப்படத்தின் முதல் காட்சிக்கு சென்றேன். என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ். அந்த அளவிற்கு விஜய்யின் மிகப்பெரும் ரசிகராக மாரி செல்வராஜ் இருந்தார் என்பது அந்த பேட்டியின் மூலமாக தெரிந்துள்ளது.