இதை செய்ய இவர் யாரு?!.. பலத்த எதிர்ப்புக்கு நச்சுன்னு பதில் சொன்ன மாரி செல்வராஜ்!..

Published on: December 20, 2023
mari selvaraj
---Advertisement---

Mari selvaraj: தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் மாரி செல்வராஜ். ஒடுக்கப்பட்ட சமுதயாத்திலிருந்து வந்ததால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையே தனது படத்தில் பேசும் இயக்குனர் இவர். முதல் படமான பரியேறும் பெருமாளிலேயே ஒடுக்கப்பட்ட மனிதர்களை இந்த சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதை கன்னத்தில் அறைந்து சொல்லியிருந்தார்.

இந்த படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையையே பேசியது. மாமன்னன் படம் மூலம் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் மாறிவிட்டார். சமீபத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் அதிக மழை பெய்து மக்கள் பெருமளவு பாதிக்கப்படனர்.

இதையும் படிங்க: அது ‘பாஸ்’ இல்லைங்க! தளபதி 68 பற்றி அர்ச்சனா கல்பாத்தியே சொன்ன சூப்பர் தகவல்!

பல ஏரிகள் மற்றும் அணைகளிலிருந்து மழை நீர் வெளியாகி ஊருக்குள் புகுந்ததால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய ஊர்களே தாமிரபரணி நீர் ஓடும் ஊர்களாக மாறியது. இந்த ஊர்களில் இருப்பவை எல்லாமே கிராமங்கள்தன. எனவே, பல கிராமங்களும் நீரில் மூழ்கியது. பலரின் வீடுகளும் நீரில் முழ்கியது.

mari

எனவே, அருகிலிருந்த உயரமான வீடுகளில் தஞ்சம் அடைந்து உயிரை காப்பாற்றிக்கொண்டனர். மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவை கூட இல்லாமல் தத்தளித்தனர். எனவே, அந்த ஊர் இளைஞர்கள் பலரும் மீட்பு குழுவினரோடு இணைந்து செயல்பட்டனர்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே!.. எல்லாத்துக்கும் ரெடியான ஹீரோயின்!.. 2 வருஷத்துல லேடி சூப்பர்ஸ்டார் ஆகிடணுமாம்!

இதில், இயக்குனர் மாரி செல்வராஜும் ஒருவர். அமைச்சர் உதயநிதியோடு இணைந்து அவரும் களத்திற்கு சென்று பலரையும் மீட்க உதவி செய்தார். அதோடு, மக்களின் நிலை பற்றி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் கொடுத்தார். இதையடுத்து ‘இதை செய்ய மாரி செல்வராஜ் யார்?.. அவர் என்ன அரசு அதிகாரியா?.. இல்லை அமைச்சரா?’ என திமுக கட்சியை பிடிக்காத பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் தனது டிவிட்டரில் ‘என் கலையும் கடமையும் நான் யார் என நிரூபிப்பது அல்ல!. நீங்கள் யாரென உங்களுக்கு நிரூபிப்பது’ என பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கருணாநிதி கதாசிரியராக மாற காரணமே அந்த நடிகர்தானாம்!. இது தெரியாம போச்சே..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.