More
Categories: latest news television

ஆதிகுணசேகரனை அடக்கி வாசினு சொன்னா அடுக்குமா? மாரிமுத்து நடிக்க இருந்த மற்றுமொரு சீரியல் எதுனு தெரியுமா?

Aadhi guna sekaran : சில தினங்களுக்கு முன்பு தன் மறைவின் மூலம் நம்மை மீளாத்துயரத்தில் விட்டுச் சென்றவர் நடிகர் மாரிமுத்து. ஒரு இயக்குனராக நடிகராக சமீபகாலமாக சின்னத்திரையில் பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் மாரிமுத்து. சன் டிவியில் மிகப் பரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலான எதிர் நீச்சலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆரம்பத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தியே வந்த இந்த சீரியல் போக போக மாரிமுத்துவின் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் சீரியலின் போக்கையே மாற்றியது. ஆதிகுணசேகரனுக்காகவே சீரியல் பார்க்காதவர்கள் கூட இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: என்னப்பா அப்டேட்னு விளையாடிக்கிட்டு இருக்கீங்க… விடாமுயற்சியை விட்டு தொலைங்கையா… காண்டான ரசிகர்கள்!

உலகெங்கிலும் உள்ள சீரியல் ரசிகர்களிடம் மாரிமுத்துவை ஆதிகுணசேகரனாக கொண்டு போய் சேர்த்தது. அந்த சீரியலில் ஒரு வில்லத்தனத்தை காட்டினாலும் அவரின் நடிப்பு திறமையால் அவரின் ரசிகர்களாகவே அனைவரும் மாறினார்கள்.

இந்த நிலையில் மாரிமுத்து விஜய் டிவில் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபல சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாக ஒரு பழைய பேட்டியில் கூறிய வீடியோ வைரலாகின்றது. அதாவது ஜெய்லர் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சூட்டிங்கில் இருந்த மாரிமுத்துவை  நடிகை ராதிகா தொடர்பு கொண்டு பேசினாராம்.

இதையும் படிங்க: இருக்கு ஆனா இல்ல! விஜய் மேல இவ்ளோ பைத்தியமா? நடிகையிடம் ஆசையை தூண்டி வேடிக்கை பார்த்த அட்லீ

அப்போது விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற சீரியல் வரப்போகிறது என்றும் அதில் ஒரு முதன்மை கதாபாத்திரம் என்றும் சம்சாரம் அது மின்சாரம் படத்தை அடிப்படையாக வைத்தே அந்த சீரியல் எடுக்கப்பட இருக்கிறதாகவும் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் ராதிகா கேட்டாராம்.

அப்போது மாரிமுத்து எதிர் நீச்சல் சீரியலை பற்றியும் மேலும் சன் டிவியில் சில பல பேரிடம் கேட்க வேண்டும் என்றும் அதன் பிறகு சொல்கிறேன் என்றும் கூறிவிட்டாராம். ஆனால் தேதி பிரச்சினையால் மாரிமுத்துவால் அந்த சீரியலில் நடிக்க முடியவில்லையாம். அதன் பிறகே விஜயின் அப்பாவான எஸ்.ஏ. சந்திரசேகர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அடுத்த ஆதி குணசேகரனுக்கு இவர்கிட்டதான் பேசுறாங்களாம்!.. அப்போ இனி சீரியல் தீயாய் இருக்குமே!.

Published by
Rohini

Recent Posts