Mark Antony: நடிகர் விஷால் நடிப்பில் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. அன்பானவன் அடங்காதவன் அசராதவன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். விஷாலுடன் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யாவும் இந்தப் படத்தில் மாஸ் காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் ஒரு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தும் என ரசிகர்களும் சரி விஷாலும் சரி பெரும் நம்பிக்கையில் இருக்கின்றனர். விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: லியோ ஆடியோ லாஞ்சே வேண்டாம்னு சொன்ன விஜய்?.. எல்லாத்துக்கும் காரணம் ஏ.ஆர். ரஹ்மான் தானா?..
செல்வராகவன் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நீண்ட காத்திருப்புக்கு பின்னாடி மார்க் ஆண்டனி படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கின்றது. ரோகினி தியேட்டரில் எஸ்.ஜே.சூர்யாவும் ஆதிக் ரவிச்சந்திரனும் படத்தின் FDFS காட்சியை கண்டு களித்தனர்.
தற்போது வரை கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் படத்தின் க்ளைமாக்ஸ் அற்புதமாக இருக்கிறது என்றும் இடைவேளை சஸ்பென்ஸோடு வைத்தது படத்திற்கு ஒரு ப்ளஸ் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஆங்காங்கே கதையில் சில குழப்பம் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஒத்த டவலை சுத்திக்கிட்டு நிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!.. ஜூம் பண்ணி தூக்கத்தை கெடுத்த பாய்ஸ்!..
இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு இந்தளவுக்கு ஹைப் வரக் காரணம் படம் 1965 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை உள்ள சம்பவங்களாக எடுக்கப்பட்டது. விஷாலும் எஸ்.ஜே.சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது.
படத்தில் சில்க் ஸ்மிதாவை மறுபடியும் கொண்டு வந்திருப்பது. படத்தில் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளை ஐந்து ஸ்டண்ட் மாஸ்டர்களை கொண்டு எடுத்திருப்பது டிரெய்லரில் ரசிக்கும் படியான கட்களை வைத்தது என ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்ததா என கூடிய சீக்கிரம் பார்ப்போம்.
இதையும் படிங்க: ஓப்பனிங் நல்லா இருந்தாலும் படம் குப்பையாதான் இருக்கும்! இவருக்கு இருக்கிற ஒரே எதிரி அஜித்தான் போல
அதற்கேற்றாற்போல ஓவர்சீஸிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதாக ரசிகர்கள் தங்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் முழுக்க எஸ்.ஜே.சூர்யாதான் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் என்றும் சொல்கின்றனர். டான்ஸ் வேற லெவல், சில்க் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது என ஓரளவுக்கு நேர்மறையான விமர்சனங்களையே மார்க் ஆண்டனி படம் பெற்று வருகிறது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…