தனது கனவு படத்தை மிகுந்த வேதனையோடு நிறுத்திக்கொண்ட கமல்.! ?

Published on: April 1, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவை ஆரம்பத்தில் இருந்து உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும் நடிகர் கமல்ஹாசனை விட இயக்குனர் கமல்ஹாசன் மிகவும் புத்திசாலி என்பது.  நடிகர் கமல்ஹாசன் எட்டடி பாய்ந்தால், இயக்குனர் கமல்ஹாசன் என்பது அடி பாய்ந்துவிடுவார் என்பது அனைவரும் தெரிந்ததே.

அவர் இயக்கத்தில் வெளியானது 4 படங்களே கிட்டத்தட்ட 80 வருட சினிமாவே அதில் அடங்கிவிடும் அளவுக்கு அதில் பல புதுமைகளை புகுத்தியிருப்பார். ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் 1 & 2 ஆகிய கருத்தியல் ப்ரமாண்டங்களே அதற்கு சாட்சி.

அவரால் அவரது கனவு படம் என அறியப்பட்டு , பிரமாண்டமாக அனைவர்க்கும் அறிவிக்கப்பட்ட திரைப்படம் மருதநாயகம். இந்த படத்தை பற்றி கேள்வி படாதோர் இருந்திருக்கவே முடியாது. கமல் நடித்த இயக்க இருந்த திரைபடம், இங்கிலாந்து இளவரசி தொடங்கி வைத்த திரைப்படம் என அதற்கு பல பெருமைகள் உண்டு.

ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே அதன் பட்ஜெட் ஏகப்பட்ட கோடிகள். அதானால் அப்போது அதனை தொடரமுடியாமல் போனது. அதற்கு பிறகு பல்வேறு முயற்சிகள் செய்தும் அது முடியாமல் போனது.

vaali and kamal in Heyram

இதையும் படியுங்களேன் – திட்டம் போட்டு ரிலீஸ் செய்யும் கூட்டம்.! அஜித், விஜய் இடையே நடக்கும் பனிப்போர் இதுதான்.?!

தற்போது அது மீண்டும், மருதநாயகத்தை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். அந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் விரும்பவில்லையாம். ஆம்,  25 வருடத்திற்கு முன்னர் அவரது உடலமைப்பு இப்படத்திற்கு ஒத்துழைத்தது. ஆனால், தற்போது அதற்கு உடல்நிலை ஒத்துழைக்க வில்லையாம்.

ஆதலால் தனது கனவு படமான மருதநாயகத்தில் இருந்து நடிப்பில் விலகி இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி, அதில் வேறு நடிகரை நாயகனாக வைத்து நடிக்க வைக்க திட்டம் போட்டு வருகிறாராம்.  விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment