அண்ணாமலை படத்திற்கு மாஸ் பிஜிஎம்... தேவாவை திட்டிய ரஜினி ரசிகர்கள்... என்ன நடந்ததுன்னு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தில் இருந்து தான் ரஜினிக்கு திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற எழுத்துக்கள் வரும்போது மியூசிக் அந்த பிஜிஎம் செம மாஸாக வரும். இன்று வரை ரஜினி படங்களில் டைட்டில் கார்டு போடும் போது அந்த பிஜிஎம் தான் வருகிறது. அவ்வளவு மாஸ் அது.
அதற்குச் சொந்தக்காரர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் அந்தப் படத்தின் போது நடந்த சுவையான அனுபவங்களை யூ டியூப் சேனல் ஒன்றில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்திற்கு என்னை இயக்குனர் பாலசந்தர் போனில் அழைத்து இசை அமைக்கச் சொன்னார். நான் டைரக்ட் பண்ணல. என்னோட சிஷயன் சுரேஷ் கிருஷ்ணா தான் என்றார். அவர் இந்தப் படத்திற்கு ரஜினி தான் ஹீரோ என்றார். அவ்வளவு தான் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அப்புறம் முதல் பாடல் அண்ணாமலை... அண்ணாமலைன்னு கம்போஸ் பண்றேன். பாலசந்தர் யோவ் இத்தனை நாள் எங்கய்யா இருந்தன்னு கேட்டார். அப்புறம் இப்போ ரஜினி வருவான்னு சொன்னார். அப்போ பால்காரர் கெட்டப்ல வந்த ரஜினி சார் அதைக் கேட்டுட்டு நைஸ் நைஸ்னு சொன்னார். அன்னைக்கு ரஜினி என் கார்லயே வந்து அவரு வீட்டுல இறங்கினார்.
படத்தோட 100வது நாள் வெற்றி விழாவுல எனக்கு ரஜினி செயின் ஒண்ணு போட்டாரு. அவரு போட்டது தான் போட்டாரு. மறுநாள் காலையில வீட்டுக்கிட்ட 200 ரஜினி ரசிகர்கள் வந்துட்டாங்க. எங்க தலைவர் செயின் போட்டாராமே. அதைக் கொஞ்சம் காட்டுங்கன்னு சொன்னாங்க. அப்போ நான் தூங்கிட்டு இருந்ததால கழட்டி வச்சிட்டேன். போய் போட்டுட்டு வர்ரேன்னு சொன்னேன்.
இதையும் படிங்க... இடுப்புல இருக்க கொலுசுக்கே சொத்த எழுதலாம்!.. வாலிப பசங்களை இம்சை பண்ணும் காவ்யா…
ஒருத்தர் திட்டிட்டார். "என்ன சார் உங்களுக்கு ஆசையா தலைவர் செயின் போட்டுருக்காரு. என்ன கழட்டி வச்சிட்டுத் தூங்கறீங்க"ன்னு கேட்டார். நேத்து நைட் தான் போட்டார். தூங்கறதனால கழட்டி வச்சேன்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.