எவளோ வேணும்னாலும் தரேன்.! என்கூட படுக்க வரியா.?! மாஸ்டர் பட நடிகைக்கு நடந்த கொடூரம்.!

தமிழ் சினிமாவில் ,மட்டுமல்ல உலக சினிமா வட்டாரத்தில் கூட இந்த பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து தான் வருகிறது. அதனை பல நடிகைகளும் வெளிப்படையாக தற்போது கூறி வருகின்றனர்.
நடிகைகள் அந்த மாதிரியான புகார்களை வெளிப்படையாக கூறுகிறார்கள் என சந்தோசப்படுவதை காட்டிலும், அது தொடர்ந்து நடந்து வருகிறேதே என்பது தான் மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு. அந்த மாதிரியான சம்பவம் தான் தற்போதும் நிகழ்ந்துள்ளது.
விஜய் டிவி சீரியல்ஸ் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர் சௌந்தர்யா நந்தகுமார். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட நடித்திருப்பார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஓர் பதிவை பதிவிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன் - நான் உப்புமாவ சாப்பிடவே மாட்டேன்.! அடம்பிடித்த கமல்ஹாசன்.!
அதில், ஒரு நபர் அவரிடம் உன்கூட படுக்கணும், எவளோ வேணும்னாலும் தரேன் என நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வெளிப்படையாக ஆபாசமாக பேசியுள்ளார். இதனை, சௌந்தர்யா ஸ்க்ரீன் சாட் எடுத்து தனது போஸ்டில் பதிவிட்டு அதிரவைத்துள்ளார் சௌந்தர்யா.
இந்த பதிவுக்கு கீழே, பலர் வந்து அந்த நபரை கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த மாதிரியான நபர்களுக்கு தக்க பதிலடி கிடைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது.