இப்படி சொல்லித்தான் அதிதியை புக் பண்றாங்களாம்!. ரொம்ப அப்புராணியா எல்லாத்தையும் நம்புதே இந்த பொண்ணு!...
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நடிக்க துவங்கியவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரின் மகள் இவர். இவரை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என ஷங்கர் ஆசைப்பட்டார். அதிதியையும் எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார். ஆனால், படித்து முடித்துவிட்டு ‘நான் மருத்துவர் ஆகமாட்டேன். நடிகையாகத்தான் மாறுவேன்’ என அப்பாவிடம் சண்டை போட்டு சம்மதம் வாங்கிவிட்டார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் நடிக்க துவங்கினார். துருதுரு நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். மண்டேலா இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கிய இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தில் மாஸ் வில்லனாக விஜய் சேதுபதி!.. இனிமே ஹீரோ அவ்வளவுதானா!..
இந்த படத்தில் அதிதி நடித்திருந்தாலும் அவருக்கு முக்கிய வேடம் இல்லை. அவரின் கதாபாத்திரம் கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருக்கான காட்சிகளும் மிகவும் குறைவு. எனவே, இதில் நடிக்க அவர் எப்படி ஒப்புகொண்டார் என்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.
இப்போதுதான் அதற்கான காரணம் வெளியே லீக் ஆகியுள்ளது. முதல் காரணம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்பது முக்கிய காரணம். அடுத்து, ‘இந்த படத்தில் நடித்தால் அடுத்த படத்திலும் நீங்கள்தான் கதாநாயகி’ என வாக்கு கொடுத்தார்களாம். அடுத்த படமெனில் தயாரிப்பாளரின் அடுத்த படமா? இயக்குனரின் அடுத்த படமா? என்பது தெரியவில்லை.
சினிமாவில் கொடுக்கப்படும் வாக்குறுதி என்பது நடக்கும் என சொல்லவே முடியாது. அதிதி சினிமாவுக்கு புதிது என்பதால் அவரை சுலபமாக நம்ப வைத்துவிட்டார்கள் என விபரம் அறிந்த திரையுலகினர் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் எப்படி இருக்கு?.. தியேட்டரில் போய் பார்க்கலாமா? வேண்டாமா?