கமலுடன் முடிஞ்சு போச்சுனு நினைச்சேன்! ‘ரஜினி171’க்கு இப்பவே அடித்தளம் போட்ட நடிகை - எடுபடுமா?
Actress Abirami: தமிழ் சினிமாவில் கமல் , ரஜினி என ஒரு பெரிய ஆளுமைகளாக வந்து கொண்டிருக்கின்றனர். 80களில் இருந்து இன்று வரை தங்களுடைய திறமைகளை காட்டி வருகின்றனர். இன்றைய இளம் தலை முறை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகர்களாக ரஜினியும் கமலும் இருந்து வருகின்றனர்.
விஜய், அஜித், சூர்யா என்ற அடுத்தக்கட்ட தலைமுறை நடிகர்கள் வந்தாலும் இன்னும் கமல், ரஜினியின் இடத்தை பிடிக்கமுடியாமல் திணறி வருகின்றனர். அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை வசூலில் இவர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : மகனுக்காக பல ஹீரோக்களின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ.சி… அம்புட்டு பாசமோ!
கமல் தற்போது இந்தியன் 2 படத்திற்காக மிகத்தீவிரமாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறார். அதனை அடுத்து எச்.வினோத் இயக்கத்திலும் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதே போல் ரஜினி தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் இணைய இருக்கிறார். லோகேஷுடன் இணையும் ரஜினி171 படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்புகள் இப்பொழுது இருந்தே அதிகரித்து விட்டன.
இதையும் படிங்க: நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம் ஆன பின்னரும் ஷாருக்கான் கிட்ட ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியல போல!..
இந்த நிலையில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170வது படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை அடுத்து 171வது படத்திற்கு தானாகவே வந்து தனது விண்ணப்பத்தை போட்டிருக்கிறார் ஒரு நடிகை.
வானவில் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு முன்னனி நடிகையாக வந்த அபிராமி கமலுடன் இணைந்து விருமாண்டி என்ற படத்தில் நடித்தார். அதுதான் அவர் நடித்த கடைசி படமாக இருந்தது.
அதன் பிறகு திருமணம் குடும்பம் என வெளி நாட்டில் போய் செட்டிலாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்தார். இடையிடையே டப்பிங்கிலும் கலக்கினார். விஸ்வரூபம் படத்திலும் டப்பிங் பேசியிருக்கிறார் அபிராமி.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்த அபிராமி தனது ஆசைகளை கூறியிருக்கிறார். அதாவது இன்னும் ரஜினியுடன் தான் நடிக்க வில்லை என்றும் ஆனால் நாள்கள் இருக்கிறது என்றும் அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: கடனில் சிக்கிய சிவாஜி பட இயக்குனர்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..
ஏற்கனவே ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்களின் படங்களுக்கு கதாநாயகியாக ஒரு மெச்சூரிட்டியான நடிகைகளையே தேடிக் கொண்டிருக்கும் போது அபிராமி தானாகவே வந்து தனது ஆசையை வெளிப்படுத்தியது ஒரு வேளை ரஜினி171 படத்திற்கு லோகேஷ் அபிராமியை அழைக்க வாய்ப்பிருக்கலாம் என்று தெரிகிறது.