Categories: Cinema News latest news

சொந்த செலவிலேயே சூனியம் வைக்குமா ரெட் ஜெயண்ட்? ‘இந்தியன் 2’ படத்தில் தடாலடியாக ஏற்பட்ட மாற்றம்

Indian 2: கமல் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம்தான் இந்தியன் 2. ஆனால் படம் இப்போது மூன்று பாகங்களாக தயாராகியிருக்கிறது.

இந்தியன் படத்தின் முதல் பாகம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். சமுதாயத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல்களை எதிர்த்து அந்தப் படத்தில் காட்டியிருக்கும் காட்சிகள் மிக ஆணித்தரமாக மக்களுக்கு விளங்கும் படி படமாக்கியிருப்பார்கள்.

Also Read

இதையும் படிங்க: மியூசிக் போடாமலேயே முழுப்பாடலுக்கும் நடித்து முடித்த சிவாஜி… எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!…

இப்போது இந்த இரண்டாம் பாகமும் கண்டிப்பாக அந்த மாதிரியான கதையில்தான் எடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி இந்தியன் 2 படத்தை லைக்காவுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரிப்பதால் பேனரில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பெயர் இருக்குமா இருக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் இந்தியன் 2 படத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில்  அது ஆளும் கட்சிக்கு எதிராக கிண்டலான பதிவுகளும் மீம்ஸ்களும் உருவாகும் என்ற காரணத்தினால் பேனரில் இருந்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பெயர் மட்டும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சி டீமை வச்சி செய்யும் அஜர்பைஜன்!… இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ரூட்டை திருப்பிய மகிழ் திருமேனி…

ரெட் ஜெயண்டே தயாரித்து அதுவும் ஊழல் பற்றிய கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் படம் வெளியானால் அது உதய நிதி உட்பட அவருடைய அரசியலுக்கும் பின்னடைவை ஏற்படுத்துவதாக இருக்கும் என கோடம்பாக்கத்தில் ஒரு கருத்து உலா வருகின்றது.

Published by
Rohini