தினேஷை இது வச்சு தான் காலி செய்யணும்…! மாயா பூர்ணிமாவின் மட்டமான ப்ளான்..கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நாளுக்கு நாள் தப்பான ரூட்டில் பயணிப்பதாகவே ரசிகர்கள் எண்ண வைத்து வருகின்றனர். அதை சரியென நம்ப வைக்கும் பொருட்டு மாயா, பூர்ணிமா போட்ட ப்ளான் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

கடந்த சீசன்களில் இருந்த போட்டியாளர்கள் எல்லாம் அங்கு நடக்கும் விஷயங்களை வைத்து வெற்றி பெற வேண்டும் எனப் போராடுவதையே வழக்கமாக வைத்து இருந்தனர். அவர்களிடமும் போட்டி பொறாமை இருந்தது. ஆனால் இந்த சீசன் வேற ரூட்டில் பயணிக்கிறது.

இதையும் வாசிங்க:தீபாவளி அன்னைக்காது சண்டை இல்லாம இருக்கீங்களே… மொக்கை வாங்கிய முத்து..!

போட்டியாளர்களின் வெளி வாழ்க்கையை உள்ளே அழைத்து வந்து அதை வைத்து ஜெயிக்க பார்க்கிறார்கள். ப்ரதீப் ஆண்டனிக்கு வெளியில் ரசிகர்கள் அதிகம் இருந்ததால் மாயா அவரை தன் கையில் வைத்து கொண்டு ஒரு கட்டத்தில் பிரச்னை மொத்தத்தையும் அவர் பக்கம் திருப்பினார். அவருக்கு ரெட் கார்டும் கொடுக்கப்பட்டது.

இதே ரூட்டை எல்லா ஆண்களுக்கும் பயன்படுத்தும் நோக்கில் இருக்கிறார்கள் இந்த சீசன் பெண் போட்டியாளர்கள். இந்த வாரம் நடந்த கோர்ட் டாஸ்கில் உருப்படியான ஒரு கேஸை போட்டு வெற்றி பெற்ற ஒரே ஆள் என்னவோ தினேஷ் தான். பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பா? நிக்சனுக்கு உள்ளாடையை காட்டினார்.

ஆனால் அது ஜோக் தான் என மாயா பேச இதையே நாங்க செஞ்சா ஜோக் ஆகிடுமா என தினேஷ் மடக்கி அந்த கேஸில் ஜெயிச்சும் விட்டார். அதனால் அவரை பேசி எல்லாம் ஜெயிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டனர் மாயா மற்றும் பூர்ணிமா.

இதை தொடர்ந்து அவர் பேசிக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாகிறது. அதில், தினேஷை நாம் பேசி ஜெயிக்க முடியாது. அவரை நம்ம சைடில் வச்சிக்க வேண்டும். டம்மியா வச்சு நமக்காக மட்டுமே பேச வைக்க வேண்டும் என்கிறார் மாயா.

இதையும் வாசிங்க:கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்னைக்கு கறிவிருந்தா?.. இல்ல பழய கஞ்சியா..!

தொடர்ந்து அவர் மனைவி ரச்சிதா இருக்காங்கள என மாயா சொல்ல அதை வைத்து என்ன செய்ய என்கிறார் பூர்ணிமா. அதை கேட்டு அவரை எமோஷனலாக பேச வைக்க வேண்டும். நாம் ஆறுதல் சொல்லலாம் அதுக்கு என்கிறார் மாயா. செய்யலாம் என்கிறார் பூர்ணிமா.

இதையடுத்து ஒரு போட்டியாளரின் சொந்த வாழ்க்கையை உங்க கேமிற்காக இழுப்பது எப்படி நியாயம் ஆகும்? இதுப்போல தான் ப்ரதீப்பையும் கைக்குள் வைத்து கடைசியில் பிரச்னையில் மாயா சிக்க வைத்தாரோ என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story