More
Categories: Biggboss Tamil 7 latest news television

கமல் கூட நடிச்சாலே பிரச்னை தான் போல..! பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்திருக்கும் மாயா மீது மி டூ புகார்!

Maya Krishnan: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் சிலரை பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளிவருவது வாடிக்கை தான். இந்த லிஸ்ட்டில் எப்போதுமே ஆண்கள் தான் இருப்பார்கள். இந்த முறை முதல் முறையாக ஒரு பெண் போட்டியாளர்கள் மீது வெளிவந்து இருக்கும் ஒரு புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இரண்டு நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போதே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சண்டைகள் துவங்கிவிட்டது. அதன்படி இன்று வெளிவந்த இரண்டு ப்ரோமோக்களுமே காரசாரமாக அமைந்துள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில் இப்போட்டியில் கலந்து கொண்டு இருக்கும் மாயா கிருஷ்ணன் மீது மி டூ புகார் இருப்பதாக ஒரு ஆங்கில கட்டுரை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்தபதிவில், அனன்யா ராம்பிரசாத் என்பவர் 2016ல் மாயாவின் நாடக குழுவில் சேர்ந்து இருக்கிறார். அப்போது அனன்யாவுக்கு 18 வயது மாயாவுக்கு 25 வயது எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வனிதாவை விட வாய் அதிகமா இருக்கும் போல!.. முதல் நாளிலேயே இத்தனை பேர் நாமினேட் பண்ணியிருக்காங்க!..

என்னை தன்னுடைய கட்டுப்பாட்டில் மாயா வைத்திருந்தார். நண்பர்கள் யாருடனும் பேசவிடவில்லை.  அவர்களிடம் என்னை தவறாக திரித்து சொல்லிவிட்டார். நான் ஒரு மோசமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த மாயா அந்த பதிவில் என்னை பற்றி கூறியது எதுவும் உண்மையே இல்லை. இத வழக்கினை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மேலும் என்னை பற்றி அவதூறு கிளப்பிய அனன்யா மீது வழக்கு தொடர்ந்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பிரச்னை நடந்து 5 வருஷம் முடிந்த நிலையில், இன்னமும் மாயாவின் மீது சர்ச்சை சுற்றி வருகிறது. பிக்பாஸ் அவர் எண்ட்ரி ஆகி இருக்கும் நிலையில் இதுகுறித்து பேச்சுக்களும் அடிப்பட்டு வருகிறது. ஆனால் மாயா பேசி இருக்கும் சில விஷயங்கள் லைக்ஸை அள்ளி இருக்கிறது. அதில் பெண்கள் பிடித்த ட்ரெஸ் தான் போடணும்.

இதையும் படிங்க: பிக்பாஸ்: உன்கிட்டலாம் கேட்க முடியாது.. பிரதீப்பை பங்கம் பண்ணிய விஜய்… சைடில் கெடா வெட்டிய நிக்சன்..!

அது வேற யாருக்கும் பிடிக்கலனா போகட்டும் என தன்னுடைய சக போட்டியாளர்களிடம் மாயா பேசி இருந்தார். இதனால் அவருக்கு பாசிட்டிவ் கமெண்ட்களை அதிகம் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இனிமே எப்படி போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Akhilan

Recent Posts