Cinema News
‘மாநாடு’ பிடிக்கலைனுட்டாங்க.. ஹீரோ ரெடியா இருக்கனும்! பார்ட் 2 பற்றி தயாரிப்பாளர் சொன்னதை கேளுங்க
Manaadu Movie: சிம்புவுக்கு நீண்ட நாளுக்கு பிறகு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்த படம் மாநாடு. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க ஒரு டைம் டிராவல் கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்தார் வெங்கட் பிரபு. சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க கூடவே ப்ரேம்ஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
படத்தில் மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இந்தப் படம்தான் எஸ்.ஜே. சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்றுக் கொடுத்த படமாக அமைந்தது. அதிலிருந்தே அவரின் மார்கெட்டும் உயரத் தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படம் 100 கோடி க்ளப்பிலும் இணைந்தது. சிம்புவின் கெரியரிலேயே மாநாடு படம்தான் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
இதையும் படிங்க: இளையராஜா அந்த இடத்துல வாத்தியாரு மாதிரி… மகன் -மகள்னுலாம் பார்க்க மாட்டாரு…
இந்தப் படத்திற்கு பிறகு சிம்பு அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்துதல போன்ற படங்களில் நடித்து மீண்டும் தன்னை யார் என்பதை நிரூபித்தார். இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அண்மையில் மாநாடு படத்தை பற்றி அவருடைய அனுபவத்தை கூறினார். அதாவது மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சுரேஷ் காமாட்சி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நல்ல பெரிய அளவில் போகக் கூடிய படம்தான்.
இதையும் படிங்க; மாநகரம் படத்தில் நடிக்க இருந்த தொகுப்பாளர்!… உங்களுக்கு என் படம் மொக்கை… லோகேஷா இப்படி சொன்னாரு?
ஆனால் அதற்கு இயக்குனர் ரெடியாக வேண்டும். இன்னொரு பக்கம் படத்தின் ஹீரோவும் ரெடியா இருக்க வேண்டும். வெங்கட் பிரபு கோட் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். ஒரு வேளை இருவரும் ஃபிரீயாக இருந்தால் கூட இரண்டாம் பாகத்தில் நடிக்க சிம்பு ரெடியா இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் மாநாடு படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்க ரொம்பவும் கஷ்டப்பட்டேன் என்றும் படம் பார்த்தவர்கள் படம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் என்று சுரேஷ் காமாட்சி கூறினார்.
படம் வெளியான பிறகுதான் படத்தின் ரிசல்ட்டை பார்த்து வாங்க வந்தார்கள். அதற்கு காரணம் சிம்புவின் முந்தைய படமான ஈஸ்வரன் படம்தான் காரணம். அது சரியாக போகாததால் இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும் என நினைத்து வாங்க மறுத்தார்கள் என சுரேஷ் காமாட்சி கூறினார்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு பிளாப் படங்கள் இவ்வளவு இருக்கா? எந்த ஊரில் இப்படி ஓடுச்சுன்னு தெரியுமா?