நானும் விஜயும் சண்ட போடுறது புதுசு இல்ல… அவருக்கு என்கிட்ட இது பிடிக்காது… ஓபனாக சொன்ன எஸ்.ஏ.சி
SAC: பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனுக்கும் தனக்குமான உறவு எப்போதுமே இப்படியே இருக்காது. பலருக்கும் தெரியாத ரகசியங்களும், சண்டைகளும் எங்களுக்குள் நடந்து இருக்கிறது. அதற்கு இப்போ என்ன என்று காரசாரமாக பதில் அளித்துள்ளார்.
கோலிவுட்டில் மாஸ் ஹிட் இயக்குனராக இருந்த சந்திரசேகரின் ஒரே மகன் தான் விஜய். மகன் தன்னுடைய நடிப்பு ஆசையை அவரிடம் சொன்ன போது முடியவே முடியாது எனக் கூறி விட்டார். இருந்தும் அடம் பிடித்து இருந்த விஜயை நடிக்க சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க:போனஸ் மேல போனஸ அள்ளி வீசும் சன்பிக்சர்ஸ்…எல்லாம் ஜெயிலர் செஞ்ச வேலைதான்…
ரஜினியின் அண்ணாமலை டயலாக்கை பக்காவாக பேசி தந்தையையே அசரடித்து இருக்கிறார். இருந்தும் தயங்கியவர் தன்னுடைய மனைவி ஷோபாவின் கட்டாயத்தின் பேரில் விஜயை நடிக்க வைக்க ஒப்புக்கொள்கிறார். அதன் பின்னர் மகனுக்காக நிறைய ஸ்கெட்ச் போட்டு அவரை இந்த அளவுக்கு மாற்றி இருக்கிறார்.
விஜயின் ஆரம்பகாலங்களில் அவரின் தந்தை சந்திரசேகர் தான் கதையை கேட்டு ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்குவார். அப்படி தந்தை சொன்ன எல்லாவற்றையும் அச்சு பிசிராமல் செய்வார் விஜய். தந்தை சொன்ன படத்தின் மீது விருப்பமே இல்லை என்றாலும் நடித்து கொடுத்து இருக்கிறார் விஜய்.
இதையும் படிங்க:என்னய்யா!… எங்களுக்கு ஆப்பு வச்சிருவீங்க போலயே… அதிர்ந்து போன இறைவன் படக்குழு…
ஆனால் சில வருடங்களாகவே இருவருக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. தந்தையுடன் விஜய் பேசுவது இல்லை எனத் தகவல்கள் பரவி இருந்தது. அதற்கேற்ப வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் பெற்றோரை விஜய் தவிர்த்த வீடியோவும் வைரலாக பரவியது.
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் விஜயிடம் ஒரு கண்டிப்பான தந்தையாகவே இருந்து இருக்கிறேன். அவனுக்கு நிறைய கட்டுப்பாடுகளை போட்டு இருந்தேன். கார் ஓட்ட கூட அனுமதித்தது இல்லை. அதனால் அவனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். அது உண்மை தான். எல்லார் வீட்டிலும் இது தானே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.