பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு என்ன முயற்சி மேற்கொண்டாலும், தனியார் எவ்வளவு முயற்சி செய்து அதனை வெளிக்கொணர்ந்தாலும், பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த புகாரை சினிமா உலகில் அதிகம் நாம் கேட்டு கொண்டிருக்கிறோம்.
இதனை தடுக்க மீ டூ என புகார் மூலம் பல பிரபலங்களின் முகத்திரையை பல பெண்கள் கிழித்தனர். இதனை தடுக்க சினிமா துறையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்களேன் – அவருக்கு நாங்க செய்யாமலா.? அதிரடி நாயகன் பேச்சு.! கேப்டன் விஜயகாந்திற்கு என்ன பண்ண போறாங்கனு தெரியுமா.?!
இருந்தும் அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த பிரபல காமெடி நடிகர்நடிக்கும் படத்தில் பெண் உதவி இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலைபார்த்து வந்துள்ளார். கொஞ்சம் பேசிய அந்த காமெடி நடிகர் எல்லை மீறி இரவு தனது கெஸ்ட் கவுசிற்கு அழைத்துள்ளார்.
இதனை பார்த்து, அதிர்ச்சியடைந்த அந்த பெண் உதவி இயக்குனர் படக்குழுவினரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அந்த படக்குழு காமெடி நடிகர் முன்னணி காமெடி நடிகர் என்பதால் எதுவும் சொல்லாமல், சரிம்மா, நீ ஷூட்டிங் ஸ்பாட் வர வேண்டாம். நேராக டப்பிங், சவுண்ட் மிக்சிங் , எடிட்டிங் பணிகளில் வந்து சேர்ந்து கொள் என அனுப்பிவிட்டார்களாம் அந்த படக்குழு.
இதையும் படியுங்களேன் – அந்தமாதிரி நடந்தாலும் எனக்கு பரவாயில்லை… மெட்ராஸ் நாயகியின் அதிரடி பதில்..!
இது போன்ற பட நிறுவனங்களுக்கு மத்தியில், ஜகமே தந்திரம், விக்ரம் வேதா படஙக்ளை தயாரித்த ஒய் நாட் பட நிறுவனம் தங்களது பட ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை கண்காணிக்க ஓர் குழுவை நியமித்து உள்ளதாம். அந்த குழு மறைமுகமாக கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாம் ஒய் நாட் பட நிறுவனம்.
நடிகர் பிரதீப்…
Good bad…
நடிகர் கார்த்திக்கை…
Samantha: தென்னிந்திய சினிமாவில்…
ராணுவத்தை மையமாக…