தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட நடிகை மீனா...! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் செய்தி..

by Rohini |
meena_main_cine
X

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரது கணவர் வித்யா சாகர் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக் குறைவால காலமானார். இந்தச் செய்தியை அறிந்து திரையுலகமே வருத்தத்தில் மூழ்கினர். மேலும் பிரபலங்கள் பலரும் நேரடியாக அஞ்சலி செலுத்தினர்.

meeena1_cine

இந்த நிலையில் கணவர் இல்லாத முதல் திருமண நாளை இன்று மீனா எதிர்கொண்டுள்ளார். இதே நாளில் 2009 ஆம்
ஆண்டில் இவருக்கும் வித்யாசாகருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. சிறிய வயதிலேயே வித்யாசாகர் மரணமடைந்தது மீனா குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

meena2_cine

சிறு வயதில் இருந்தே நடித்து வரும் மீனா சினிமாவின் அனைத்து முன்னனி நடிகர்களோடு இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் பெங்களூரை சார்ந்த் சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை மணந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரே ஒரு மகள் உள்ளார்.

meena3_cine

கணவர் இறந்த சில தினங்களிலே இவர் எதிர்கொண்ட முதல் திருமண நாள் என்பதால் மிகவும் மன வேதனையில் இருப்பார். இருப்பினும் தன் மகளுக்காக தன்னுடைய வேதனையை தாங்கிக்கொண்டு மகளை தேற்றி வருகிறார் என சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Next Story