அசிங்கப்படுத்திய மீனா அம்மா… ஆனால் ஈகோ இல்லாமல் அஜித் செய்த அந்த விஷயம்!…

Published on: April 19, 2024
---Advertisement---

Ajith-Meena: நடிகை  அஜித் எப்போதுமே ஈகோ இல்லாமல் பழகுபவர். அவரையே திமிராக மீனாவின் அம்மா அசிங்கப்படுத்த அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் அஜித் செய்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரி கொடுத்தவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்து ஹிட்டடித்தார். அதையடுத்து தற்போது கோலிவுட்டில் குணசித்திர வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

Also Read

இதையும் படிங்க: விஜயோட பைக் டிரைவர்.. ஒரே பட்டன் அஜித்!.. ஒருத்தர விடாம பங்கம் பண்ணும் புளூசட்ட மாறன்..

கோலிவுட்டில் மீனா கொடிகட்டி பறந்து வந்த சமயங்களில் அவருடன் படப்பிடிப்புக்கும், மற்ற இடங்களுக்கும் மீனாவின் அம்மா தான் வருவாராம். அப்படி ஒரு சமயம் நட்சத்திர கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அஜித்துடன் மீனா நடனம் ஆட முடிவெடுக்கப்பட்டதாம்.

ஆனால் மீனாவின் அம்மா என் மகள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க இருக்கிறாள். நீங்க அஜித்தோடு போய் அவரை ஆட சொல்வது சரிதானா? அவள் மார்க்கெட் கேரியர் என்னாவது என அவர் கடுகடுத்ததும் அந்த குறிப்பிட்ட நடனம் கேன்சல் செய்யப்பட்டதாம். ஆனால் அந்த நிகழ்வுக்கு பின்னர் மீனாவின் மார்க்கெட் சரிந்தது.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் கார்த்திக்-ஜெஸ்ஸி.. அதுவும் இந்த படத்திலா? வேற லெவலில் இருக்குமே!…

அஜித் கோலிவுட்டில் வளர்ந்து கொண்டு இருந்தார். சில வருடம் கழித்து அஜித்தின் ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தன்னை அவமானப்படுத்திய நாயகி தனக்கு வேண்டாம் என எந்த இடத்திலும் அஜித் சொல்லவே இல்லையாம். மனகசப்பை காட்டாமலே அந்த படத்தினை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.