விஜய்க்கு எங்கயோ மச்சம்தான்!.. புடவையில் மனச கெடுக்கும் ‘கோட்’ பட நடிகை....

Meenakshi chaudhary: ஹரியானாவை சேர்ந்தவர் மீனாக்ஷி சவுத்ரி. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். பல் மருத்துவம் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல அழகிப்போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார்.
சில அழகிப்போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இவர் முதன் முதலில் நடித்தது ஒரு வெப் சீரியஸில்தான். அதன்பின் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தர். ஒரு ஹிந்தி படத்திலும் நடித்திருந்தார். விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான கொலை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதேபோல், மகேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குண்டூர் காரம் படத்திலும் மீனாக்ஷி நடித்திருக்கிறார். மகேஷ்பாபுவுடன் நடித்துவிட்டால் அடுத்தது விஜயிடம்தானே நடிக்க வேண்டும். உங்கள் கணிப்பு சரிதான். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்திலும் மீனாக்ஷி சவுத்ரிதான் கதாநாயகி.
இந்த படத்திற்கு பின் மேலும், பல திரைப்படங்களில் மீனாக்ஷி சவுத்ரி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், அம்மணி வெளியிடும் புகைப்படங்களில் அவர் காட்டும் கவர்ச்சியில் ரசிகர்களும் சொக்கிப்போய் வருகின்றனர்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை நச்சென காட்டி மீனாக்ஷி சவுத்ரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் விஜய் ரசிகர்களையும், நெட்டிசன்களையும் ஜொள்ளுவிட வைத்துள்ளது.