மனசாட்சியே இல்லையா மீனாட்சி உனக்கு!.. கோட் ஹீரோயினை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!..

நடிகை மீனாட்சி சவுத்ரி தங்க நீறத்தில் தகதகவென மின்னுகின்ற உடையில் செம கவர்ச்சியாக உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் வேலையை சரியாக செய்து வருகிறார்.
மீனாட்சி சவுத்ரி மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கி 2020ம் ஆண்டு தெலுங்கில் வெளியான எச்சாட்டா வாகனமுலு நிலுபரடு படத்தில் சுஹாந்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கில்லாடி, இரண்டாவது வழக்கு, குண்டூர்காரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கொலை படத்தின் மூலம் அறிமுகமான அவர் சிங்கப்பூர் சலூன், கோட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

கோட் படத்தைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் படத்திலும் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய மீனாட்சி சவுத்ரி தி கோட் படத்திற்கு பிறகு தன்னை பலரும் ட்ரோல் செய்தார்கள் அது எனக்கு மன அழுத்ததை ஏற்படுத்தியது. ஆனால் லக்கி பாஸ்கரில் நான் நடித்தத்ற்கு எதிர்பாராத அளவிற்கு பாராட்டுகளை பெற்றேன். அதிலிருந்து கதைகளை தேர்ந்தேடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று புரிந்துக்கொண்டேன் என பேசியிருந்தார். லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் மீனாட்சி சவுத்ரி.

இந்நிலையில், தற்போது மீனாட்சி சவுத்ரி தங்க நிறத்தில் தகதகவென மின்னும் உடையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், இயக்குநர் மாரி இயக்கத்தில் உருவாகி வரும் அனகனக ஒக ராஜு படத்தில் நவின் பொலிஷெட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மீனாட்சியின் அடுத்த படம் மே 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாய் அபயங்கருடன் இணைந்து சித்திர புத்திரி பாடலுக்கு தேவதை போல ஆடிய மீனாட்சி சவுத்ரிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட மில்லியன் ரசிகர்கள் உள்ளதால் அடிக்கடி இப்படி அவர்களை குஷிப்படுத்தும் போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகிறார்.