வாவ்...அதே குறும்பு.. அதே அழகு...க்யூட்டாக நடனம் ஆடி வீடியோ போட்ட மீரா ஜாஸ்மின்...
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். சில மலையாள படங்களில் நடித்துள்ளார். லிங்குசாமியின் கண்ணில் பட்டதால் அவர் மாதவனை வைத்து இயக்கிய ‘ரன்’ படத்தில் நடிக்க வந்தார். முதல் படமே சூப்பர் ஹிட்.
குழந்தை போல் முகம், குறும்புத்தனம், முகபாவனை என முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மீரா ஜாஸ்மின். இவரைப் போல் நமக்கும் ஒரு காதலி வேண்டும் என வாலிப பசங்களை ஏங்க வைத்தார். விஷாலுக்கு ஜோடியாக ‘சண்டக்கோழி’ படத்தில் நடித்தார். அஜித்துக்கு ஜோடியாக ஆஞ்சநேயா படத்தில் நடித்தார். விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்தார். அதன்பின் பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பின் அவர் குண்டாக தோற்றமளிக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இதையும் படியுங்க: கட்டையிலும் நீ செம்மரக்கட்டை!…வாளிப்பான உடலை வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா….
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகியுள்ளார். புளூ ஜீன்ஸ் மற்றும் வெள்ளை கலர் சட்டை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்படுத்தியது.
இந்நிலையில், ஒரு பாடலுக்கு க்யூட்டாக நடனம் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் போதும் இன்னும் அவரின் அந்த குழந்தைத்தனமான குறும்பு இன்னும் குறையவே இல்லை என்பது புரிகிறது.
மேலும், ‘நீங்கள் உங்கள் நேரத்தை எனக்கு அளித்துள்ளீர்கள், இது எல்லாவற்றையும் விட மிகவும் சிந்தனைமிக்க பரிசு. தாழ்மையுடன்... அரவணைப்பு மற்றும் அன்பினால் நகர்ந்தேன். முழுமையான நன்றியுணர்வு மற்றும் எல்லையற்ற அன்பு. இந்த அழகான பயணம் தொடர்கிறது’ என உருகியுள்ளார் அம்மணி.