அஜித்தை தப்பா பேசாதீங்க!.. விஜயகாந்த் நினைவேந்தலுக்கு வராததற்கு இதுதான் காரணமா?.. பிரபலம் பதில்!

Published on: January 21, 2024
---Advertisement---

கேப்டன் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கு, நினைவேந்தல் என எதற்குமே இதுவரை அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவே இல்லை. இந்நிலையில், நடிகர் அஜித் பற்றி தவறாக பேச வேண்டாம் என மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வீடியோ மெசேஜில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் இதே கருத்தை தான் வலியுறுத்தினார் என்றும் மேடையில் பேசிய விஜய பிரபாகரன் அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்றும் வராதவர்கள் மீது எந்த ஒரு கோபமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் என மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: 500 கோடியை தாண்டி வசூல்!. தமிழ் சினிமாவை வேறலெவலுக்கு கொண்டு போன 5 இயக்குனர்கள்…

அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அஜித் இருந்து வருகிறார். சினிமாக்காரர்களுக்கு காம்பினேஷன் ஷாட் இருக்கும், அனைத்து நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டிய சூழல் இருக்கும், குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் இது போன்ற பல காரணங்களால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியாதவரை யாரும் குறை சொல்லக்கூடாது என்றும் விஜயகாந்தின் குடும்பத்தினரே இதனை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளனர் என மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் விஜயகாந்த் மீது அளவற்ற பாசம் கொண்டவர்கள் என்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விஜயகாந்த் பற்றி பேசியதெல்லாம் சிறப்பான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிவாஜி சொல்லியும் கேட்கல!.. கடைசியில காசு போனதுதான் மிச்சம்!.. ஏவிஎம் சந்தித்த தோல்வி…

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.