Connect with us
sivaji

Cinema History

சிவாஜி சொல்லியும் கேட்கல!.. கடைசியில காசு போனதுதான் மிச்சம்!.. ஏவிஎம் சந்தித்த தோல்வி…

Sivaji ganesan: சினிமா என்பது அதை பார்க்கும் ரசிகர்களுக்குதான் பொழுதுபோக்கு. ஆனால், நடிகர்களுக்கு அது தொழில். தயாரிப்பாளர்களுக்கு அது வியாபாரம். கொஞ்சம் பணத்தை போட்டு அதிக லாபத்தை எடுப்பதுதான் சினிமாவின் நோக்கம். ஆனால், எல்லா படமும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் என சொல்ல முடியாது.

சில படங்கள் வசூலை வாரிக்கொடுக்கும். சில படங்களில் போஸ்டருக்கு செலவு செய்த பணம் கூட வராது. அதுதான் சினிமா. எட்டு கோடியில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 80 கோடி வரை வசூல் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்தது. அதுபோல சில படங்கள் மட்டுமே அமையும்.

இதையும் படிங்க: சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த சரோஜா தேவி!. டிராப் ஆன திரைப்படம்!..

சில படங்கள் உருவாகும்போதே சிலர் எச்சரிப்பார்கள். ஆனால், தயாரிப்பாளர் அதை கேட்கமாட்டார். கடையில் நஷ்டத்தை சந்திப்பார். கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனம்தான் ஏவிஎம். இவர்கள் சரியான திட்டமிடலோடுதான் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள்.

யார் ஹீரோ.. அவருக்கு என்ன வியாபாரம்… இயக்குனரின் அனுபவம் என்ன?.. இவ்வளவு பட்ஜெட் போட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?.. என்றெல்லாம் கணக்கு போட்டுத்தான் பட வேலையையே துவங்குவார்கள். ஆனால், நடிகர் சொல்லியும் கேட்காமல் ஒரு படத்தை தயாரித்து அவர்கள் நஷ்டமடைந்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

இதையும் படிங்க: நாடகத்தில் சிவாஜிக்கு கிடைத்த அந்த வேடம்!. ஆனாலும் ரசித்து செய்து கைத்தட்டலை வாங்கிய நடிகர் திலகம்..

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் நடித்து 1960ம் வருடம் வெளியான திரைப்படம்தான் தெய்வப்பிறவி. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படம் வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், ‘இந்த படம் வெற்றி பெற்றதுக்கு காரணமே எங்கள் மூவரின் நடிப்புதான். ஹிந்தியில் அதுபோல நடிகர்கள் கிடைத்தால் எடுங்கள்.. இல்லையென்றால் இந்த படம் ஹிந்தியில் எடுபடாது’ என ஏவிஎம் நிறுவனத்திடம் சிவாஜி சொல்லியிருக்கிறார்.

deivapravi

ஆனால், ஏவிஎம் நிறுவனம் இதை கேட்கவில்லை. அதோடு, இதைக்கேட்டு இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சு இருவரும் கோபப்பட்டுள்ளனர். ஹிந்தியிலும் இப்படத்தை ஹிட் கொடுப்போம் என சொல்லி படத்தை இயக்கியுள்ளனர். Bindya என்கிற பெயரில் உருவான இந்த படம் தோல்வி அடைந்தது.

சிவாஜி தனக்குள்ள அனுபவத்தால் பலமுறை தனக்கு தெரிந்த, நெருக்கமானவர்களுக்கு அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். சிலர் அதை கேட்டுள்ளனர். சிலர் கதை கேட்காமல் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள். சாவித்ரியே தயாரிப்பாளராக ஆசைப்பட்டு சிவாஜியிடம் வந்தார். அவர் எவ்வளவு சொல்லியும் சாவித்ரி கேட்கவில்லை. அப்படி உருவான ப்ராப்தம் படம் தோல்வி அடைந்து சாவித்ரி கடனாளி ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவாஜிக்கு இயக்குனர்கள் வைத்த சவால்!. அசால்ட் பண்ணி தூக்கி சாப்பிட்ட நடிகர் திலகம்…

google news
Continue Reading

More in Cinema History

To Top