டிசம்பரில் களைக்கட்ட இருக்கும் முக்கிய ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள்… இந்த நடிகர்கள் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்கள்..!
Mega Audio Release: தமிழ் சினிமாவில் தற்போதைய காலத்தில் நடிகர்கள் படங்களை விட அவர்களின் ரியல் வாழ்க்கை பிரச்னையே அதிகம் இருப்பதால் ரசிகர்கள் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் முக்கிய இரண்டு நிகழ்ச்சி இந்த மாதம் நடக்க இருக்கிறது.
கோலிவுட்டில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தான் அதிகமாக நடந்து வந்தது. இந்த பிரச்னைக்கு முதலில் வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சரத்குமார் தான் கொளுத்திவிட்டார். அது பற்றி எரிய தொடங்கியது. அதை தொடர்ந்து ஜெயிலர் பட விழாவில் காக்கா, கழுகு கதையை சொல்லி ரஜினி மாஸ் காட்டினார்.
இதையும் படிங்க: நான் திருடனா?!.. என் மகனுக்கு என்ன பதில் சொல்றது?!. சிவக்குமாருக்கு அமீர் அனுப்பிய மேசேஜ்!..
இதனால் விஜயின் லியோ ஆடியோ ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்து இருந்தனர். ஆனால் அப்போது இருந்த சில சூழலால் படக்குழு அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்தது. இதனை தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் விஜய் தன்னுடைய குட்டி கதையை சொன்னார்.
ஒரு காட்டில் காக்கா எனச் சொல்லி அவர் சிரித்தது, அப்பா சேருக்கு ஆசைப்பட கூடாதா எனக் கேள்வி கேட்டது, ஒரே சூப்பர்ஸ்டார் என ஆறுதல் பேசியது எல்லாமே வைரல் கண்டெண்ட்டாக மாறியது. இதில் துணை இயக்குனர் ரத்னகுமார் கழுகு பசிச்சா கீழே வரணும் எனப் பேசி மேலும் பிரச்னையை கொளுத்திவிட்டார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி – மிஷ்கின் இணையும் புதிய படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? சத்தமே இல்லாமல் நடந்து முடிஞ்ச பூஜை
குட்டி கதையா இல்ல விஜயுக்கு பதிலடியா என ரசிகர்கள் தீவிரமாக காத்து இருக்கின்றனர். இதை தொடர்ந்து டிசம்பர்26ந் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இருக்கும் அயலான் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்க இருக்கிறது. பொதுவெளியில் அடிக்கடி தலைக்காட்டுவார் சிவா.
ஆனால் டி.இமான் பிரச்னைக்கு பின்னர் அவர் வெளியில் பெரிதாக வராமல் இருக்கிறார். இதனால் இந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுவார். அப்படி என்ன பதில் சொல்ல போகிறார் என ரசிகர்களும் ஆவலாக காத்து இருக்கின்றனர். வெயிட் பண்ணுவோம்..!
இதையும் படிங்க: ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்