விருதுக்காக மெனக்கிடும் ‘மெய்யழகன்’ படம்! என்னெல்லாம் பண்றாங்க பாருங்க..
Meiyazhagan Movie: 96 படத்தை எடுத்த பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் டைட்டில் வெளியானதும் அனைவருமே படத்தின் தலைப்பை பெரிய அளவில் பாராட்டினர். இவ்வளவு அழகான தமிழில் இப்படி ஒரு பெயரா என ஆச்சரியப்பட்டனர்.
இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. படத்தை 2d நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..
இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் போன்ற பிரபல நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இது கார்த்திக்குக்கு 27வது திரைப்படமாகும். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. ஒளிப்பதிவு மகேந்திரன் ஜெயராஜூ. எடிட்டிங் ஆர் கோவிந்தராஜ்.
தற்போது கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அந்த படத்திற்காக ஈவிபியில் பெரிய அளவில் ஒரு பிளைட் செட்டு போட்டு படமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். 1970களில் நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி அந்த காட்சி அங்கு படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணமாக இருந்தது அவரா? ஆனா வெளியே ஏன் தெரியல…?!
இந்த நிலையில் மெய்யழகன் படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருந்தாலும் படத்திற்காக கார்த்தி டப்பிங் வேலையை ஆரம்பிக்கவே இல்லையாம். முதலில் ஸ்ரீதிவ்யா சம்பந்தப்பட்ட டப்பிங் தான் படமாக்கப்பட்டு வருகிறதாம். ஸ்ரீதிவ்யாவை பொறுத்த வரைக்கும் அவர் நடித்த படங்களில் இதுவரை அவர் சொந்த குரலில் பேசியதே இல்லையாம்.
ஆனால் இந்த படத்தில் தான் முதல் முறையாக அவருடைய சொந்த குரலில் டப்பிங் பேசுவதாக சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் இயக்குனர்தான் என்றும் கூறுகிறார்கள். பிரேம் குமாரை பொறுத்த வரைக்கும் கதையிலிருந்து எல்லாமே எதார்த்தமாக இருக்க வேண்டும் என விரும்புபவர்.
இதையும் படிங்க: விஜயிடம் போனில் பேசிய அஜித்!.. தளபதியிடம் தல சொன்னதுதான் ஹலைட்!….
மேலும் இந்த மெய்யழகன் திரைப்படம் பல பெரிய விருதுகளை பெற வேண்டும் என நினைக்கிறாராம். அதனால் ஸ்ரீதிவ்யாவை அவருடைய சொந்த குரலிலேயே பேச வைத்திருக்கிறாராம் பிரேம்குமார். படம் வெளியாகி எப்படிப்பட்ட ஒரு வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.