மெய்யழகன் படத்தில் முதல் சாய்ஸ் யார் தெரியுமா? நடந்தா தீயா இருக்குமே!

meiyazhagan
Meiyazhagan: கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் முதல் சாய்ஸாக இருந்த நடிகர்கள் குறித்து இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்து இருக்கிறார்.
பிரேம் குமார் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இவ்வளவுதானா?!… அதிர்ச்சி கொடுக்கும் கோட் படத்தின் வசூல்!..
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறது.

meiyazhagan
இது குறித்து இயக்குனர் பிரேம்குமார் கூறும் போது, இப்படத்தை முதலில் நான் வெறும் கதையாக தான் எழுதினேன். படம் எடுக்கும் எண்ணம் இல்லை. அந்த சமயத்தில் படத்தின் முக்கிய இரண்டு கேரக்டருக்கு ரொம்பவே கலைநயம் கொண்ட முகங்கள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க: சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?
அவர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் கதையை எழுத முடியும். அதற்காக கார்த்தி நடித்த கேரக்டரில் ரஜினிகாந்தையும், அரவிந்த்சாமி நடித்த கேரக்டரில் கமல்ஹாசனையும் மனதில் வைத்து தான் இதை கதையாக எழுதினேன். ஆனால் அது குறித்து யாரிடமும் சொல்லவில்லை.
மொத்தமாக கதையை எழுதி முடித்த பின்னர்தான் இதை படமாக எடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். இவரின் முந்தைய திரைப்படமான 96 போல இப்படமும் ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக தான் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் இப்படம் மேலும் சுவாரசியமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.