Categories: latest news

மேனன் கேரக்டரில் முதலில் இந்த நடிகரைதான் யோசிச்சேன்… ஆனா? வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

Venkat Prabhu: இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய கோட் திரைப்படத்தில் மைக் மோகன் நடித்த கேரக்டரில் பிரபல நடிகர்கள் சிலரை தான் யோசித்தாராம். ஆனால் அது நடக்காமல் போனதன் காரணம் குறித்து தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் பணிக்குள் நுழைய இருக்கும் தளபதி விஜய் தன்னுடைய கடைசி கட்ட சினிமா கேரியரில் இருக்கிறார். அவருடைய கடைசி படங்களில் ஒன்றாக சமீபத்தில் வெளியானது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா,  சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: அரண்மனை4ஐ தொடர்ந்து காஞ்சனா4… ஹீரோயின் யாரு தெரியுமா? சுவாரஸ்ய அப்டேட்

படத்தில் வில்லன் வேடத்தில் மைக் மோகன் நடித்திருக்கிறார். அவர் மேனன் என்ற உளவுத்துறையின் தலைவராக நடத்த இருந்தார். முதலில் இந்த கேரக்டருக்கு அரவிந்த்சாமி மற்றும் மாதவனை தேர்வு செய்யலாம் என  வெங்கட் பிரபு யோசித்து இருக்கிறார்.

Aravind swamy_Madhavan

ஏனெனில் ஜெயராமிற்கு முன்னாள் இருந்த தலைவர் மேனன். அவர் செய்யும் தவறை அக்குழுவில் இருக்கும் விஜய் தன்னுடைய நண்பர்களுடன் கண்டறிகிறார். இதை முதலில் காட்சியாக எடுக்க யோசித்த பின்னர் நீளம் கருதி அதை டயலாக்கில் முடித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கணவர் எப்படி இருக்கணும்னு ரவிக்கிட்ட கத்துக்கணும்!.. வைரலாகும் ஆர்த்தி பேட்டி!…

இதனால் அவர் ஜெயராமை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். அரவிந்த்சாமி மற்றும் மாதவன் அதற்கு செட்டாகாமல் போய்விடுவார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களை படத்திற்கு கொண்டு வந்தால் அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்குமாறு காட்சிகள் அமைக்கப்பட வேண்டும்.

அவர்களுக்காக ஏதாவது மாற்றி செய்ய வேண்டியதாகி விடும். இதனால் தான் அந்த கேரக்டருக்கு மோகனை தேர்வு செய்ததாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.

Akhilan

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

17 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago