தலதான் அடுத்த சி.எம்…தலைவர் ஆகுற தகுதி விஜய்க்கு கிடையாது!.. மீசை ராஜேந்திரனின் சர்ச்சை பேச்சு!..

Published on: May 2, 2023
---Advertisement---

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு மத்தியில் போட்டிகள் இருந்துள்ளன. எம்.ஜி.ஆர், சிவாஜி. ரஜினி, கமல் என துவங்கிய இந்த போட்டிகள் தற்சமயம் விஜய் அஜித் வரை வந்து நிற்கிறது.

அதற்கு தகுந்தாற் போல விஜய்யும் அஜித்தும் ஒரே நாளில் படத்தை வெளியிடுவது என அவர்களும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த போட்டியை தக்கவைத்து கொள்கின்றனர். ஏனெனில் நடிகர்களின் மார்க்கெட்டை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள இந்த போட்டி தேவையாக இருக்கிறது.

ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்குள் இந்த போட்டி இருக்குமா? என்பது சந்தேகமே. தற்சமயம் விஜய் அஜித் போட்டிதான் இங்கு பெரிய போட்டியாக உள்ளது. வெகு நாட்களாக விஜய் அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.

விஜய்யா? அஜித்தா?:

இதுக்குறித்து தமிழ் திரையுலக பிரபலமான மீசை ராஜேந்திரன் கூறும்போது விஜயகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருகிற அளவிற்கு மற்ற நடிகர்களுக்கு தகுதி உள்ளதா? என தெரியவில்லை. ஆனால் அஜித்தை பொறுத்தவரை அஜித் பலருக்கும் நல்லது செய்தவர். அதனால் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயித்து விடுவார்.

ஆனால் ஏனோ அவர் அரசியல் மீது ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். தனது திரைப்படங்களில் கூட அரசியல் ரீதியான வசனங்கள் இடம் பெறுவதை தவிர்க்கிறார். அதே சமயம் விஜய் அரசியலின் மீது அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

ஆனால் அரசியல் ரீதியான எந்த விஷயங்களுக்கும் விஜய் கருத்து தெரிவிப்பதில்லை. ஒரு தலைவர் ஆகுறதுக்கான தகுதி விஜய்க்கு இல்லை என்றே நினைக்கிறேன் என வெளிப்படையாக கூறினார் மீசை ராஜேந்திரன்.

இதையும் படிங்க: கமல் ஒரே நேரத்தில் 6 நடிகைகளை காதலித்தார்!.. எப்படி சமாளிச்சாருன்னு தெரியல!.. நடிகை பகிர்ந்த ரகசியம்…

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.