லேட்டா வந்த கண்ணதாசன்!.. பாட்டு மூலமா அறிவுரை சொன்ன எம்.ஜி.ஆர்.. கவிஞருக்கு இது தேவைதான்!…
எந்த விஷயம் என்றாலும் சரி சரியான நேரத்திற்கு சென்றுவிட வேண்டும். இல்லையேல் அந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு போய்விடும். இது எந்த துறைக்கு பொருந்துமோ சினிமா துறைக்கு அதிகம் பொருந்தும். தாமதமாக சென்றால் ஹீரோ வாய்ப்பை கூட பலரும் இழந்துள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். அவருக்கு காதல் மற்றும் தத்துவ பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். அதேபோல், எம்.ஜி.ஆருக்கு கவிஞர் வாலியும் பல பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆர் தன்னை தானே புகழ் பாடும் பல பாடல்களை எழுதியது கவிஞர் வாலிதான்.
சரி விஷயத்துக்கு வருவோம். எம்.ஜி.ஆர் தன்னிடம் இருந்த எல்லா பணத்தையும் போட்டு தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் நாடோடி மன்னன். இந்த திரைப்படம் 1958ம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் பானுமதி, சரோஜா தேவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் அறிவுரை சொல்வது போல ஒரு தத்துவ பாடல் எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது. எனவே, கண்ணாதாசனிடம் நாளை காலை 9 மணிக்கு வந்துவிடுங்கள் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். ஆனால், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் காலை 8 மணிக்கே வந்துவிட்டார். எம்.ஜி.ஆரும் வந்துவிட்டார். ஆனால் கண்ணதாசன் வரவில்லை. 12.30 மணிக்குதான் கண்ணதாசன் வந்துள்ளார். அவர் வந்தவுடன் எம்.ஜி.ஆர் ‘நீங்கள் வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என நினைத்து கல்யாண சுந்தரத்தை வைத்து ஒரு பாடல் எழுத வைத்தேன்’ என சொல்லி அந்த பாடல் வரிகளை கண்ணதாசனிடம் காட்டினார்.
கல்யாண சுந்தரம் எழுதியிருந்த அந்த பாடல்தான் ‘தூங்காதே தம்பி தூங்காதே..சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’. அந்த பாடல் வரிகளை படித்துபார்த்த கண்ணதாசன் ‘இதற்கு என் கன்னத்தில் நான்கு அறை அறைந்திருக்கலாம். இனிமேல் பாடல் எழுதுவதற்கு தாமதமாக வரவே மாட்டேன்’ என எம்.ஜி.ஆரிடம் சொன்னாராம்.
இதையும் படிங்க: எனக்கு கவர்ச்சியா ஆட தெரியாது சார்!- ஹீரோயினுக்கு இடுப்பை பிடித்து டான்ஸ் சொல்லி கொடுத்த பாக்கியராஜ்!..