Cinema History
குறுக்கே வந்த நடிகர்!.. எம்.ஜி.ஆர் நடிக்க பயந்த அந்த படம்!… ஆனால் நடந்ததே வேற!…
MGR: எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த நடிகர். இவர் தமிழில் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படத்தில் இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சிவாஜி போன்ற நடிகர்களுக்கு தங்களது முதல் படத்திலேயே கதாநாயகனாய் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் எம்ஜிஆருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது எம்ஜிஆருக்கு ஒரு பயத்தையும் ஏற்படுத்தியது. இவருக்கு முதன்முதலில் சாயா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாய் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
இதையும் வாசிங்க:சிவகுமாருக்கு அவர் தந்தை சொன்ன ஜோசியம் என்ன தெரியுமா?.. அச்சு அசலாக அப்படியே நடந்ததாம்..!
ஆனால் எம்ஜிஆர் இப்படத்தில் நடிக்க பயந்துள்ளார். எங்கு தன்னை கதாநாயகனாக நடிக்க வேண்டாம் என கூறிவிடுவார்களோ எனும் ஒரு பயத்திலேயே இருந்துள்ளார். ஒரு நாள் படபிடிப்பு தளத்திற்கு பி.யூ.சின்னப்பா வந்தாராம். அப்போது இவரின் நண்பர்கள் ஒருமுறை இவரிடம் பி.யூ.சின்னப்பாவைதான் இப்படத்தில் கதாநாயகானாக நடிக்க வைக்க போகிறார்கள் என கூறிவிட்டனராம்.
ஆனால் பி.யூ.சின்னப்பாவோ தன்னால் ஒருவர் சினிமாவில் வளர்வது தடைபடக்கூடாது என்பதற்காக அவர் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால் எம்ஜிஆர் பயந்தது ஒரு சமயத்தில் பழித்தும் விட்டதாம். இப்படத்தை முழுவதும் முடிக்காமல் படம் பாதியிலேயே நின்றுவிட்டதாம். இதனால் எம்ஜிஆர் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளார்.
இதையும் வாசிங்க:எல்லா பாட்டும் எழுதினது நான்! ஆனா பேரு யாருக்கு தெரியுமா? ரஜினி படத்தில் நடந்த குளறுபடிய சொன்ன வாலி
ஆனால் அதன்பின் எம்ஜிஆருக்கு நல்ல காலமோ என்னவோ அவருக்கு அடுத்த படத்திலேயே கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டதாம். அப்படம்தான் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ராஜகுமாரி. இப்படத்தை இயக்குனர் சாமி இயக்கியிருந்தார். இப்படத்தில் முதலில் தியாகராஜ பாகவதரையும், பானுமதியையும் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்த நிலையிலும் இயக்குனர் சாமி எனக்கு ‘இப்படத்தில் நடிக்க எம்ஜிஆர்தான் வேண்டும்’ என கேட்டாராம்.
இந்த உறுதியினால்தான் எம்ஜிஆர் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் எம்ஜிஆருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும். இப்படமே இவர் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க அடித்தளமாக அமைந்து என்றுதான் கூற வேண்டும்.
இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆரை மீறி திருமணம் செய்து வைத்த ஜெயலலிதா!.. பொன்மன செம்மலுக்கு வந்த கோபம்!.