More
Categories: Cinema History Cinema News latest news

சிவக்குமார் வைத்த கோரிக்கை!. தாய்ப்பாசத்தில் எம்.ஜி.ஆர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!..

MGR : திரையுலக மார்க்கண்டேயன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். ஏனெனில், 83 வயதாகிவிட்டாலும் இன்னும் இளமையாகவே வலம் வருகிறார். இப்போதும் நடை பயிற்சி, யோகா, பல மணி நேர ஆன்மிக சொற்பழிவு என ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவரின் சொந்த ஊர் கோவை. சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். துவக்கத்தில் இவருக்கு கடவுள் முருகனாக நடிக்க சில படங்களில் வாய்ப்பு வந்தது. 60களின் இறுதியில் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். சிவாஜி நடிப்பில் வெளியான உயர்ந்த மனிதன் படத்தில் அவரின் மகனாக நடித்திருப்பார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தூங்கியபோது வெடித்த துப்பாக்கிக் குண்டு!.. ஓடும் காரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

எம்.ஜி.ஆருடன் காவல்காரன், தெய்வத்தாய், இதய வீணை ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மீது சிவக்குமாருக்கு பாசமும் மரியதையும் உண்டு. மேற்கண்ட படங்களில் சிவக்குமாருடையது ஒரு சின்ன வேடம்தான். எம்.ஜி.ஆர் கழுத்தில் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்த நேரம்.

அவரை பார்க்க சிவக்குமார் இரண்டு முறை சென்றும் முடியவில்லை. ஒருவழியாக ஒரு நாள் அவரை சென்று பார்த்தார். அப்போது ‘நீ சிவக்குமார்தானே’ என எம்.ஜி.ஆர் கேட்க சிவக்குமார் அழுது விட்டாராம். ஏனெனில், அவருடன் அரை நாள் மட்டுமே நடித்தேன். என்னை இப்படி நியாபகம் வைத்திருந்தார் என சொல்லி இருக்கிறார்.

சிவக்குமார் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை வங்கியில் டெபாசிட் செய்து மாதா மாதம் அதிலிருந்து வரும் வட்டித்தொகையை ’சிவக்குமார் அறக்கட்டளை’ என்கிற பெயரில் வருடா வரும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக கொடுத்து உதவி வந்தார்.

ஒரு வருடம் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் தலையில் அந்த நிகழ்ச்சியை நடத்த ஆசைப்பட்டார் சிவக்குமார். இது தொடர்பாக எம்.ஜி.ஆரை சந்தித்து பேச கொஞ்சம் யோசித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அதன்பின் ‘நீ மட்டும் தனியாக வந்திருக்கிறாயா?’ என கேட்டிருக்கிறார். இல்லை என் அம்மாவும் வந்திருக்கிறார். அவர் கூச்ச சுபாவம் என்பதால் காரில் அமர்ந்திருக்கிறார் என சொல்லி இருக்கிறார் சிவக்குமார்.

இதைக்கேட்டு கோபமடைந்த எம்.ஜி.ஆர் உடனே வெளியே வந்து காரில் இந்த சிவக்குமாரின் அம்மாவை பார்த்து நலம் விசாரித்திருக்கிறார். அப்போது ‘நீங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும்’ என சிவக்குமாரின் அம்மா சொன்னவுடன் ‘கண்டிப்பாக வருகிறேன் அம்மா’ என சொல்லியதோடு அந்த விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: நான் அப்படி நடிக்க மாட்டேன்.. நீங்க வேணா டூப் போட்டு எடுத்துக்குங்க!. எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த காட்சி!…

Published by
சிவா

Recent Posts