எம்ஜிஆருக்கு ரொம்ப பிடிச்ச தயாரிப்பாளர்… அட அவரா? காரணம் என்னன்னு தெரியுமா?

mgr
எம்ஜிஆரைப் பொருத்தவரைக்கும் ஆரம்பகாலகட்டத்திலேயே தன்னோட உடற்கட்டைக் கச்சிதமாக வைத்திருப்பவர்களைப் பார்த்த உடனே அவருக்குப் பிடிச்சிரும். அவர் சாலிவாஹணன் என்ற படத்தில் நடித்தபோது அவருக்கு மந்திரியா 2 பேரைக் கொண்டு வந்து இயக்குனர் நிறுத்தினார்.
அந்த இருவரையும் வைச்ச கண் வாங்காம பார்த்துக்கொண்டே இருந்தாராம் எம்ஜிஆர். அதற்கு முக்கியமான காரணம் அவங்களோட உடற்கட்டு.
அவங்கள்ல ஒருத்தருக்கிட்ட உங்க பேரு என்னன்னு எம்ஜிஆர் கேட்டார். அதற்கு சின்னப்பா என்றாராம். அந்தக் காலத்துல பி.யு.சின்னப்பாவும் இது மாதிரியே நல்ல உடற்கட்டோடு இருந்தார். உடனே எம்ஜிஆர் சின்னப்பான்னு பேரு வச்சிருக்கிறவங்க எல்லாருக்குமே இப்படித்தான் உடற்கட்டு இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டாராம். அப்போது அருகில் இருந்தவர் இவர் வெறும் சின்னப்பா இல்ல. சாண்டோ சின்னப்பா தேவர் என்றாராம்.

அன்று சாண்டோ சின்னப்பா தேவருக்கும், எம்ஜிஆருக்கும் இருந்த பழக்கம்தான் அவங்க ரெண்டு பேரையும் பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்ற வைத்தது. சின்னப்பா தேவரைப் பொருத்தவரைக்கும் ஆரம்பத்துல நாங்க இருவரும் நண்பர்களாகத் தான் பழகினோம். அதன்பிறகு என்னுடைய உடன்பிறவா சகோதரராகவே ஆகிவிட்டார். அதனால்தான் எங்கள் பயணம் அந்தளவு நீடித்தது என்றும் தன்னோட வாழ்க்கை வரலாற்று நூலில் எம்ஜிஆர் குறிப்பிட்டுள்ளார்.
சாண்டோ சின்னப்பா தேவர் பிற்காலத்தில் பெரிய தயாரிப்பாளர் ஆனார். இவரது 17 படங்களில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். தனிப்பிறவி, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், விவசாயி, குடும்பத்தலைவன், தாய்க்குப் பின் தாரம், நீதிக்குப் பின் பாசம், நல்ல நேரம், கன்னித்தாய், முகராசி உள்;பட பல படங்களைத் தயாரித்துள்ளார் சின்னப்பா தேவர்.