விலங்குகளுக்கும் கேரக்டர் ரோல்.. எம்ஜிஆருடன் நட்பு.. வேற லெவலில் வெளியான தேவர் பிலிம்ஸ் படங்கள்..

விலங்குகளை வைத்து படம் எடுக்கிறார் என்றால் அது சாண்டோ சின்னப்பா தேவர் தான். இவரது படங்கள் என்றாலே அதில் விலங்குகள் வராமல் இருக்காது. அந்த வகையில் விலங்குகளுக்கும் கேரக்டர் ரோல் கொடுத்து அசத்தியவர் இவர். எம்ஜிஆரை வைத்துப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். அதில் முக்கியமான படம் தாய்க்குத் தலைமகன். 1967ல் வெளிவந்தது.

இந்தப் படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது. தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் பல படங்களைத் தயாரித்தார். இவர் படங்களில் விலங்குகள் பண்ணும் சேட்டைகளைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு வருவார்கள்.

படப்பிடிப்பு ஒன்றின் இடைவேளையில் சிங்கத்தின் மீது கம்பீரமாக தேவர் வருவது போன்ற ஒரு புகைப்படம் உள்ளது. இது நாம் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம். இவர் சிறந்த முருகபக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது படங்களில் கிடைக்கும் லாபத்தில் நான்கில் ஒரு பங்கை முருகப் பெருமானுக்கு காணிக்கையாக வழங்கி விடுவாராம். கோவை மாவட்டம் ராமநாதபுரம் இவரது சொந்த ஊர்.

SCMGR

SCMGR

நடிகர், தயாரிப்பாளர் என தமிழ்த்திரை உலகில் பல்லாண்டுகளாகக் கோலூச்சினார். இவரது தம்பி எம்.ஏ.திருமுகம். இவரும் பிரபல இயக்குனர். முன்னதாக இவர் படங்களுக்கு எடிட்டராகவும் இருந்துள்ளார். தாய்க்குப் பின் தாரம் படத்தை இயக்கியவர் இவர் தான். எம்ஜிஆருடன் நல்ல நட்பு கொண்டு இருந்தார் தேவர். 1956ல் தாய்க்குப் பின் தாரம் படத்தைத் தயாரித்தார். முதல் படமே சக்கை போடு போட்டது. அடுத்து கொங்கு நாட்டுத் தங்கம் படத்திலும் எம்ஜிஆர் தான் நடித்தார். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களாக எடுக்க ஆரம்பித்தார்.

தாய் சொல்லைத் தட்டாதே, முகராசி, கன்னித்தாய், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப் பின் பாசம், வேட்டைக்காரன், விவசாயி, தொழிலாளி, தனிப்பிறவி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய எம்ஜிஆர் படங்களைத் தயாரித்தார். இப்படி எம்ஜிஆரை வைத்து 16 படங்களை எடுத்தவர் தான் தேவர். அதன்பிறகு அவர் 77ல் முதல்வர் ஆனதும் தான் பிற நடிகர்களைக் கொண்டு படங்கள் தயாரித்தார். தேவர் மறைந்ததும், அவரது குடும்பத்தினர் ரஜினியை வைத்து தாய் மீது சத்தியம் படத்தைத் தயாரித்தார். அதன்பிறகு அன்னை ஓர் ஆலயம், ரங்கா, தர்மத்தின் தலைவன் ஆகிய ரஜினி படங்கள் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகின.

ரஜினி, கமல் நடிக்க தாயில்லாமல் நானில்லை, துணைவன், தெய்வம், ஆட்டுக்கார அலமேலு ஆகிய படங்களும்; அப்படித் தான் வந்தன.

 

Related Articles

Next Story